உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

95

களிடத்தில் விளங்கித் தோன்றுவான் என்பதை நாம் எடுத்துச் சொல்லுதலும் வேண்டுமோ? எல்லையற்ற அன்பும் இன்பமுமே இறைவனுக்கு உண்மையான

வடிவமா

மென்பதையும் அவ் அன்புருவினையும் இன்புருவினையும் டையறாது நினைந்து தாமும் அன்பும் இன்பமுமாய் இருப்பவர்கள் அவ்விறைவனுருவாய் விளங்குவர் என்பதையும் திருமூல நாயனார் அருளிச் செய்த,

அன்புஞ் சிவமும்இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவ தியாரும் அறிகிலார்

அன்பே சிவமாவ தியாரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே

என்னுந் திருமந்திரத் திருமொழியும், மாணிக்கவாசகப் பெருமான் அருளிச் செய்த

மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத் தமுதே ஊறிநின் றென்னுள் எழுபரஞ் சோதி உள்ளவா காணவந் தருளாய் தேறலின் றெளிவே சிவபெரு மானே திருப்பெருந் துறையுறை சிவனே ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த

இன்பமே என்னுடைய யன்பே

என்னுந் திருவாசகத் திருப்பாட்டும் நன்கு அறிவுறுத்துகின்றன வல்லவோ?

அங்ஙனம் அன்புருவாயும் அருளுருவாயும் இரக்கவுரு வாயும் விளங்காநின்ற நம் ஆண்டவன் தன்போல் அன்பும், அருளும், இரக்கமும் நிரம்பித் திகழாநின்ற உயிர்களிடத்து மட்டுமே குடிகொண்டு தோன்றுவான் என்னும் உண்மை ப்போது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் இனிது விளங்கு கின்றதன்றோ?

அன்பினுள் ளான்புறத் தான்உட லாயுளான் முன்பினுள் ளான்முனி வர்க்கும் பிரானவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/120&oldid=1591090" இலிருந்து மீள்விக்கப்பட்டது