உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

மறைமலையம் - 27

பாறையிலே கதிரவன் ஒளி விளங்குமே யன்றி, விளக்கம் ல்லாத கருங்கல்லிலே அவ்வொளி விளங்குமோ சொல் லுங்கள். அன்பும் இரக்கமும் உடையவர்களைக் கண்டால் நமக்கு அன்பு உண்டாகின்றதோ சினமுங் கொடுமையும் கொலைத் தொழிலும் உடையவர்களைக் கண்டால் நமக்கு அன்பு உண்டாகின் றதோ சொல்லுங்கள். அன்புடையவர் களைக் கண்டால் மிகுந்த மனமகிழ்ச்சியும், சினமுங் கொடுமையும் உடையவர்களைக் கண்டால் அச்சமும் அருவருப்பும், கொலைத் தொழில் உடையவர் களைக் கண்டால் நடுக்கமும் திகிலும் அல்லவோ அடைகின்றோம்!

நம்மைப் பெற்றவர்களாய் இருந்தாலும், நம்மோடு கூடப் பிறந்தவர்களா யிருந்தாலும், நமக்கு நெருங்கிய உறவினராயிருந்தாலும் எவர் கொடுந்தன்மையுங் கொடுஞ் செய்கையும் உடையரோ அவரைக் காணும் போதெல்லாம் ஐயோ! நாம் எவ்வளவு அருவருப்பும் அச்சமும் நடுக்கமும் அடைகின்றோம்! நமக்கு எந்த வகையிலும் உரியவர்கள் அல்லராயினும் எவரிடத்து இரக்கமும் இனிய செய்கையும் காணப்படுகின்றனவோ ஆ! அவரிடத்து நாம் நம்மை அறியாமலே எவ்வளவோ அன்பும் எவ்வளவோ மகிழ்ச்சியுங் கொள்ளப் பெறுகின்றோம்! இனி னி இரக்கமும் இனிய செய்கையும் உடையவர்களைக் கண்டால் பூனை, நாய், குருவி, காக்கை முதலிய சிற்றுயிர்களும் அச்சம்இன்றி மகிழ்வோடு அவர்கள் பால் அணுகுகின்றன. அருட்டன்மை உடையவர் களைத் தேள், பாம்பு, புலி, கரடி அரிமா முதலான தீய உயிர்களும் துன்பஞ் செய்வதில்லை யென்றும், அவர்களுக்கு அடங்கி நடந்து விலகிப் போகு மென்றும் நல்லோர் உரைக்கக் கேட்டிருக்கின்றோம். பல வரலாறுகளிலும் கற்றறிந்திருக்

கின்றோம்.

இவ்வாறெல்லாம் மக்கட்பிறப்பினரான நமக்குள் எவர் அன்பும் இரக்கமும் உடையரோ அவரிடத்தே மற்றவர்களும் அன்பும் உருக்கமும் உடையராகின்றனரென்றால், மக்களினுந் தாழ்ந்த சிற்றுயிர்களுங்கூட அவரிடத்து அன்பினால் இழுக்கப்பட்டு அமைந்து நடக்கின்றனவென்றால், எல்லை யற்ற பேரன்பிற்கே ஓர் உறைவிடமாய் உள்ள இறைவன் அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/119&oldid=1591089" இலிருந்து மீள்விக்கப்பட்டது