உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

மனநலன் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்கு

இனநலன் ஏமாப் புடைத்து

93

(குறள் 458)

என்றும், அருந்தவ நோன்பிற் றலைசிறந்து நின்ற பட்டி னத்துப் பிள்ளையார்,

நல்லார் இணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே அல்லாது வேறு நிலையுள தோஅக மும்பொருளும் இல்லாளுஞ் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும் எல்லாம் வெளிமயக் கேஇறை வாகச்சி ஏகம்பனே

என்றும் அருளிச் செய்தனர்கள்.

இங்ஙனம் இரக்கமாகிய அருளறத்தை எவர்கள் மேற் கொண்டு ஒழுகுகிறார்களோ அவர்கள் அவ்வருள் உருவாய் விளங்குவதோடு தம்மைச் சேர்பவர்களையும் அருளுருவம் அடையச் செய்வார்கள்.

இன்னும்இவ்வருளறத்தைக்

கைப்பற்றிக் கொண்டு எவர்கள் மாறாமல் ஒழுகுகிறார்களோ அவர்களிடத்திலே எல்லாம் வல்ல ஆண்டவன் திருவரு ளானது நிறைந்து ததும்பி வழியா நிற்கும்.எவர்கள் அவ் வாண்டவன் திருவருள் விளக்கத்தை அடையப் பெறுகிறார் களோ, அவர்களிடத்தில் நோயுங் கவலையுந் துன்பமும் இறப்புமாகிய இருள்கள் நில்லாமல் மறைந்தொழியும். எவர்கள் இத்துன்ப இருளினின்றும் விடுபடுகின்றார்களோ அவர்கள் எல்லாச் செல்வமும் எல்லா நலமும் எல்லா ன்பமும் ஒருங்கே பெற்று இம்மையில் நெடுங்காலம் இனிது வாழ்ந்து, மறுமையிலும் இறைவன் திருவடிப் பேரின்பத்தில் திளைத்து இறுமாந்திருப்பர்.

இனி, இரக்கமும் அன்பும் அருளும் உடையவர்களுக்கே இறைவன் அருள்புரிகுவான் என்றும்,அவர்களிடத்து மட்டுமே அவன் விளங்கித் தோன்றுவான் என்றும், அம் மெல்லிய தன்மைகள் இல்லாருக்கு அவன் அருள் வழங்கு தலும் அவர்களிடத்துத் தோன்றுதலும் சிறிதும் இல்லை யென்றுங் கூறியதென்னை யெனின்; இரக்கமே இரக்கத்தை இழுக்கும், அன்பே அன்பைக் கவர்ந்து கொள்ளும், அருளே அருளை விளங்கச் செய்யும்; ஒளி விளக்கம் வாய்ந்த பளிங்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/118&oldid=1591088" இலிருந்து மீள்விக்கப்பட்டது