உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

❖ ❖ மறைமலையம் - 27

ஒரு குடும்பத்தில் ஒருவர் பிறவுயிரைக் கொன்றதனால் வரும் புலாலைத் தின்று பழகுவராயின்; அவரோடு சேர்ந்த அக்குடும்பத்தாரெல்லாரும் அவரைப் போற்புலாலையுண்டு கெட்டுப்போவர். கலப்பாலிற் குற்றிய ஒரு சிறு பிரைத்துளி யானது அப்பால் முழுவதையுங் கெடுத்துத் தயிராக்குவது போலவும், ஒரு சிறுதேளின் கொடுக்கில் உள்ள கடுகளவு நஞ்சானது ஒருவர் உடம்பில் உள்ள செந்நீரிற் கலந்த அளவானே அஃது அவர் உடம்பு எங்கும் பரவி அவரை மிகவும் வருந்தச் செய்வது போலவும், ஓரிடத்திற் றோன்றிய அழுகற் பிண நாற்றமானது நெடுகப் பரவித் தான் பரவிய மெல்லாம் தன் நாற்றமே நாறும்படி செய்வதுபோலவும் தீய பழக்கம் உள்ளோர் சேர்க்கையினால் அவர்களைச் சேர்ந்தவர்கள் பலரும் அவரைப் போல் தீய பழக்கம் உடையவராகின்றார்கள். இதுபற்றியே,

கொலையிலான் உதவும் அன்னங் கூறிற்பேர் அமுத மாகும் கொலையுளான் உதவும் அன்னங் கூறிற்பேர் விடம தாகும் புலையர்தம் மனையில் உண்போன் புலையனா மாறு போலக் கொலைஞர் தம்மனையில் உண்போன் கொலைஞனே

என்னுந் திருமொழியும் எழுந்தது.

ஆவனன்றே

இனி நல்ல நிலத்தைச் சேர்ந்த மழைத் தண்ணீரானது பால்போல் இனிதாயிருத்தல் போலவும், பூவோடு கூடிய நா ர் அப்பூவின் நறுமணத்தைப் பெறுதல்போலவும், பொற் கலத்தில் நிரப்பிய ஆவின்பால் மிகவும் தூய தாய்ச் சுவையுடன் விளங்குதல் போலவும், அருளும் இரக்கமும் வாய்ந்து எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ணி எதற்குந் தீங்கு செய்யாது புலாலுணவு நீக்கியொழுகும் நல்லார் ஒருவரின் சேர்க்கையால் அவருடன்சேர்ந்தவர் எல்லாரும் அவர் போல்இரக்கம் நிரம்பி நலஞ்சிறந்து ஒழுகுவர்; இது பற்றியன்றோ தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார்,

நிலத்தியல்பால் நீர்திரிந்த தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு

(குறள் 452)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/117&oldid=1591087" இலிருந்து மீள்விக்கப்பட்டது