உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

உண்மையான் இல்லாமைபோல

105

ம்

இனி ஏகான்மவாதங் கூறுவார் மதம்பற்றிக் குடங் கடோறும் உள்ள நீரின்கட் டோன்றுந் திங்களின் நிழல் அந்நீரின் அசைவாற்றானும் அசைவது போற் றோன்றினும் நோக்குமிடத்து அவ்வசைவு அதற்கு உடம்புகடோறுங் காணப்படுகின்ற கடவுளின் றோற்றமாகிய சிற்றுயிர் ஐம்பொறிகளின் இயக்கத் தாற்றானும் அசைவதுபோற் றோன்றினும் அஃதியற்கையில் அங்ஙனம் அசைவதில்லை யென்று உரையாமோவெனின்; அது பொருந்தாது. எம்முடைய உடம்பிலுள்ள மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் அவ்வைம் பொறிகளும் பிறிதொன்றன் உதவியை வேண்டாது தாமே இயங்குவன வாயின் அவை எப்போதும் இயங்கிக் கொண்டே யிருத்தல் வேண்டும்; நனவிலன்றிக் கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்பொடுக்கம் என்னும் கீழ்நிலை நான்கினும் அவை யியக்கமின்றிக் கிடத்தலானும், இனி, நனவிலேயும் அவை இயங்குங் காலத்துஐந்தும் ஒரு காலத்து ஒரு பொருளை அறியமாட்டா என்பதுஅழகியதொரு பொருளை உற்றுக் காணுமிடத்துச் செவியொன்றைக் கேளாமையினும், இனிய ஓர் இசையைக் கேட்டு அறிவு அதன் வழிப்பட்டு நின்றுழிக் கண் ஒன்றைக் காணாமையினும் வைத்து அறியக் கிடத்த லானும் இனி யிப்பொறிகள் ஐந்தினும் பற்றறப் பிரிந்து மனம் ஒன்றை நாடும் வழி அவை இயங்காது வறிது நிற்றலானும் அவ்வைந்துந் தாமே இயங்கக் கடவுளின் றோற்றமாகிய உயிர் அசைவின்றி யிருக்குமென உரைத்தல் ஏலாதென்க. உயிர் மனத்தைப் பற்ற மனம் பொறிகளைப் பற்ற பொறிகள் புலன்களைப் பற்றி நடைபெறுகின்றன என்பதே உண்மை யாம். இஃது அருணந்தியடிகள்,

L

அறிவதைம் பொறியே யென்னின் உறக்கத்தி னறியா வாகும் அறிவது மொன்றொன் றாக வொன் றொன்றா யறிவ தென்னின் அறிவுகள் ஒன்றை யொன்றங் கறிந்திடா வைந்தை யுங்கொண் டறிவதொன் றுண்ட தான்மா வைம்பொறி யறிந்தி டாவே

என்றருளிச் செய்த சிவஞான சித்தித் திருச்செய்யுளான் நன்கறியப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/130&oldid=1591100" இலிருந்து மீள்விக்கப்பட்டது