உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

❖ * மறைமலையம் – 27

மேற்கூறியவாற்றால், உயிர் ஐம்பொறிகளோடுடனாய் நின்று புலன்களைப் பற்றும்வழி அஃது ஓசையை யறியும் பொழுதும், ஊற்றினை யறியும் பொழுதும், உருவினை யறியும் பொழுதும், சுவையினை யறியும் பொழுதும், நாற்றத்தை யறியும் பொழுதும் தனித்தனியே உளவாகா நிற்கின்றன. இனி இவ்வைம்பொறி உணர்வு நிகழ்ச்சிகள் ஒருங்கு உள்வழியும் உயிர்கள் ஒரு சிலர்க்கு ஏனைப் பொறி உணர்வுகளினும் நாற்றவுணர்விற் பெருவிருப்புண்டாய்ப் பல திறப்பட்ட நறிய மணங்களை நுகர்தலிலே இன்பஞ் செல்லும் அவர் அம்மனவுணர்வினையே மிகுதியும் பாராட்டிப் பேசுவர். வேறு சிலர்க்குச் சுவை யுணர்விற் பெருவிருப்புண்டாய்த் தித்திப்புப் புளிப்புக் கார்ப்புக் காழ்ப்புக் கைப்பு உவர்ப்பு என்னும் அறுவகைச் சுவை மிக்க உணவுகளைப் பல திறத்தாற் சமைத்துச் சுவைத்தலிலே இன்பம் செல்லும்; அவர் அச்சுவை யுணர் வினையே மிகுதியும் பாராட்டிப் பேசுவர். இவ்வாறே சிலர்க்குக் காட்சியுணர்விலும் வேறு சிலர்க்கு ஊற்றுணர் விலும் மற்றுஞ் சிலர்க்கு இசையுணர்விலும் பெருவிருப் புண்டாய் மற்றை யுணர்வுகளை யிழித்துப் பேசுவர். இங்ஙனம் அவரவர் தத்தமக் கியைந்தவற்றை மிகவும் பாராட்டி அவ்வவற்றையே உயர்த்துப் பேசுங் காலங்களும் உணர்வு வேற்றுமையாற் றோன்றும் பொழுது வேறுபாடுகளென்றே தெளியப்படும். இனி "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள், மெய்ப்பொருள் காண்பதறிவு” என்ற திருக்குறளின்படி இவ் வைம்பொறி யுணர்வு களுள்ளும் இயற்கையிலே மிகச் சிறந்த தியாது? என்று நடுவு நிலையால் ஆராய்ந்து பார்க்கப் புகுவானுக்கு ஓசையுணர்வே சிறந்த ஓசையுணர்வே சிறந்த தென்பது இனிது விளங்கும். உயிரின் சிற்றறிவை விரிவுசெய்து விளக்குதற்கு இன்றி யமையாது வேண்டப்படும் அறிவு நூற் கேள்விகளெல்லாம் துணையாகக்

சவிக்கருவியினையே காண்டு நடைபெறுகின்றன வாகலின் அச்செவிக் கருவியினுள் ளமைந்த ஓசை யுணர்வே ஏனைப் பொறி யுணர்வுகளினெல்லாம் சிறந்த தென்று துணியப்படும். இதுபற்றியே தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/131&oldid=1591101" இலிருந்து மீள்விக்கப்பட்டது