உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

செவிக்குண வில்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கு மீயப் படும்

107

(குறள் 412)

என்று திருவாய் மலர்ந்தருளினார்.

அற்றேல், இவ்வைம் பொறியுணர்வின் வழிப்பட்ட உயிரின் பொழுது வேறுபாடுகளை யெல்லாம் சமயங்கள் மதங்கள் என்று வழங்காமை என்னையோ வெனின்;

6

வளத்திடை முற்றத்தோர் மாநில முற்றுங் குளத்தின்மண் கொண்டு குயவன் வனைந்தான்

குடமுடைந் தாலவை யோடென்று வைப்பர்

உடலுடைந் தாலிறைப் போதும்வை யாரே

எனவும்,

எரியெனக் கென்னும் புழுவோ

வெனக்கென்னு மிந்தமண்ணுஞ்

சரியெனக் கென்னும் பருந்தோ

வெனக் கென்னும் தான்புசிக்க நரியெனக் கென்னும்புன் னாயெனக் கென்னுமிந் நாறுடலைப்

பிரியமு டன்வளர்த் தேனித

6 எனவும்,

66

னாலென்ன பேறெனக்கே

“முடிசார்ந்த மன்னரு மற்றுமுள்ளோரு முடிவிலொரு பிடிசாம்பராய் வெந்து” எனவும் எழுந்த திருப்பாட்டுக்களின் படியே இன்னநேரத்தில் மாய்வதென்றறியப் படாதவாறு சடுதியிலே மாய்ந்தொழியும் இம்மக்களுடம்போடு அவ்வைம் பொறியான் வரும் இன்ப நுகர்ச்சிகளும் இறந்தொழிதல் காணப்படுதலாலும்,இங்ஙனம் இடை யிடையே யழிந் தொழியும் அவ்வின்ப நுகர்ச்சிகள் சிற்றுயிர்களைக் கடைத் தேற்றுதற்கு ஒருசிறிதும் பயன்படாமையாலும் அவற்றை யெல்லாம் வெறுத்துப் புறத்தே செல்லும் நம் அறிவினை அகமுகமாக உள்ளிழுத்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/132&oldid=1591102" இலிருந்து மீள்விக்கப்பட்டது