உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

66

மறைமலையம் - 27

நானா ரென்னுள்ளமார் ஞானங்களா ரென்னை யாரறிவார்” என்ற அருமைத் திருமொழியின்படி ஆ! நான் யார்? பலப்பல வேறுபாடோடும் பெரிதும் வியப்புறத் தக்கவாறாய் அமைந்திருக்கும் இவ்வுலகங்கள் யாவை? இவற்றிடையில் யான் வந்து பிறந்ததேன்? பிறந்து பலவகைத் துன்பங்ளுக்கு உள்ளாகி மிக வருந்தும்போதும் அவற்றை யிடையிடையே மறந்து நான் எப்போதும் இவ்வுலகத்தில் இருப்பதுபோல் நினைப்பதேன்? என் மனைவி மக்கள் சுற்றத்தார் பிறர் என்னுமிவர்க்கும் எனக்குமுள்ள தொடர்பு என்னை? மற்றையோரிடத்தெல்லாம் யான் அன்புடையனாய் ஒழுகாது என் மனைவி மக்களிடத்தே மட்டும் யான் அளவிறந்த அன்பு பூண்டு ஒழுகுவது என்னை? யான் இறக்குங் காலத்து அவர் அவ்விறப்பினை நீக்குவரா? யான் பிறக்குங் காலத்து அவர் அப்பிறப்பினை நீக்குவரா? யான் துன்புறுங் காலத்து அவர் அத்துன்பத்தைப் போக்குவரா? இவர் களெல்லாம் ஐயோ! எம்மைப் போலவே துன்புறுகின்றார் கள், பிறக்கின்றார்கள், இறக்கின்றார்கள்; சாவார்க்குச் சாவாரும், துன்புறுவார்க்குத் துன்புறுவாரும் துணையாவ தியாங்ஙனம்? ஐயோ! இப்பிறப்பினுந் துன்பத்தினும் எவ்வாறு நீங்குவேன்! இறக்க வேண்டுமே என்பதனை நினைக்குங் காலத்து என்னெஞ்சம் பகீரென்று துணுக்குறுகின்றதே!

“யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென் கடவேன்" என்ற மேலோர் திருமொழி இடையறாது என்னுள்ளத்திற் றோன்றி என்னை வருத்துகின்றதே என்று இவ்வாறெல்லாம் உயிரினறிவானது உள்மடங்கி ஐம்பொறி களின் குறும்பையெல்லாம் ஒடுக்கிக் கொண்டு தனது நிலை யை ஆய்ந்து பார்க்குங் காலந்தான் உயிர்களுக்கு என்றும் மாறாது நிகழும் சமயமாதலின் இங்ஙனம் நினைவு நிகழும் சமயமே சமயம் அல்லது மதம் என்று ஆன்றோரான் வழங்கப்பெற்றது.

முன்னே காட்டியபடி எங்ஙனமானால் நமது உணர் வானது ஐம்பொறிகளின் வழிப்பட்டு நடைபெறுங்காலத்து அதுவதுவாய் நின்று புலன்களை நுகர்ந்துதான் மிக விரும்பிய தொன்றனை அதன்மேற் சென்ற பற்றால் உயர்த்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/133&oldid=1591103" இலிருந்து மீள்விக்கப்பட்டது