உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

109

ஆராய்ந்து

பேசுகின்றதோ அங்ஙனமே நமதறிவால் காணப்படுகின்ற மெய்ப்பொருள் உணர்ச்சிகளுள்ளும் நாம் மிக விரும்பியதொன்றனை நமதுள்ளம் சிறந்தெடுத்துக் கூறா நிற்கின்றது. அறிவு நிரம்பவில்லாது தாழ்ந்த நிலைக் கண்ணராய் நிற்கின்ற உயிர்கள் பொருள்களைப் பிரித்துப் பிரித்து ஆயும்போது அவர்கள் அறிவு மேற்பட்ட பொருள் களிற் செல்லாமையால் மண், புனல், அனல், கால் என்னும் நாற்பொருளே மெய்யென்றும், இந்நாற்பொருட் கூட்டத் திற் றோன்றிய இவ்வுலகமும் வ்வுலகமும் உடம்புமே மெய் யென்றும் உட்கோடலால் உலகாயத மதம் தோன்றுவதாயிற்று. இவ்வாறே இவர்க்கு மேற்பட்ட நிலையிற் சென்றாரால் இந்திரியான்ம வாதமும், இவர்க்கு மேற்பட்ட பதத்திற் சென்றாரால் அந்தக் கரணான்ம வாதமும் இவர்க்கும் மேற்பட்டாராற் பிராணான்ம வாதமும், இவர்க்கும் மேற்பட்டாரால் விஞ்ஞானான்ம வாதமும், இவர்க்கும் மேற்பட்டாராற் சீவப்பிரம வாதமுமெனப் பலப்பலவான மதங்களும், பலப்பலவான பொருளாராய்ச்சி களும் பல திறப்பட்டுத் தோன்றின.

மாயினும் ஏனைய

இவற்றுள் ஒன்றே மெய்ந்நிலையாய்ப் பெறப்படு ஏனையவெல்லாம் பொய்யென்று கழிக்கப் படாமல் அம் மெய்ந்நிலையினைப் பயப்பதற்குரிய படிவழி நிலைகளாய் நிலைபெறுவனவாம். மேலே காட்டியவாறு சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்பொறியுணர்வு

களுள் ஓசையுணர்வே ஏனை எல்லாவற்றினும் மிகச்

சிறந்ததாயினும் அவை யொவ்வொன்றும் ஏனைய தன் வளர்ச்சிக்கு வாயிலாய்ப் பயன்படுதல்போலவும், மக்கட் பிறவியினுள் குழவிப் பருவம், பிள்ளைப்பருவம், இளமைப் பருவம், முதுமைப்பருவம் என்பனவற்றுள் முதுமைப் பருவமே அறிவு மிகச் சிறந்ததாயினும் அதனை எய்துதற்கு ஏனை மூன்று மூன்று பருவங்களும் ஒன்றற்கொன்றுதவியாய் இன்றியமையாது வேண்டப்படுதல்போலவும், மெய்ந் நிலைச் சித்தாந்த மாய் முடிக்கப்படும் ஒரு மெய்ச்சமயத் தினைச் சென்றடை தற்குரிய பேரறிவினைப் பயத்தற்கு மிகத் தாழ்ந்த பதத்திலே தோன்றிய சிற்றறிவுச் சமய முதல் எல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/134&oldid=1591104" இலிருந்து மீள்விக்கப்பட்டது