உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

❖ ❖ மறைமலையம் – 27

ஒன்றற்கொன் றுதவியாய்ப் பெரிதும் ம் பயன்படுதலு டையவாம். கடவுளும் உயிரும் இல்லையென்று சொல்லும் நாத்திகமத முதற் கொண்டு உயர்ந்த வேதாந்த சித்தாந்த முடிநிலைப் பெரும் பொதுச் சிறப்புண்மைப் பொருளா யுள்ள மெய்ச்சமயங் காறுமுள்ள எல்லா உயிர்கட்கும் இறைவன் றிருவருட்பேறு உண்டென்பது துணிபொருளே யாமென்க. இது தமிழ் மறையுள்,

விரிவிலா வறிவினார்கள் வேறொரு சமயஞ் செய்தே எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற் கேற்ற தாமே

என்று பெறப்பட்டமையானும், தமிழ் ஆகம சித்தாத்தத்துள், “அறுவகைச் சமயத் தோர்க்கும் அவ்வவர் பொருளாய்"

என்று வலியுறுத்தப்பட்டமையானும் இனிது விளங்கும்.

இனி இப்பெற்றிப்பட்ட மெய்ப்பொரு ளாராய்ச்சிப் படிகளையெல்லாம் கடந்து மேல்நிலைக்கண்ணே சென்றா னுக்குக் கீழ்நிலைக் கண்ணுள்ளனவெல்லாம் பொருளல்லன வாய்த் தோன்றுமாகலின் அதுபற்றி அவன் இகழப்படு வானல்லன், அம்மேனிலைக் கண்ணே நின்று பேரின்பத்தை நுகர்ந்து கொண்டு,

சோம்ப ரிருப்பது சுத்த வெளியிலே சோம்பர் கிடப்பது சுத்த வொளியிலே சோம்ப ருணர்வு சுருதி முடிந்திடஞ்

சோம்பா கண்டாரச் சுருதிக்கட் டூக்கமே

என்றபடி எவ்வகைச் செயலுமில்லாத தூயசோம்பராய்ப்

பூதமுங் கரணம் பொறிகளைம் புலனும்

பொருந்திய குணங்களோர் மூன்றும்

நாதமுங் கடந்த வெளியிலே நீயு

6

நானுமாய் நிற்குநாள் உளதோ

வாதமுஞ் சமய பேதமுங்

கடந்த மனோலய வின்பசா கரனே ஏதுமொன் றில்லேன் யாதுநின் செயலே யிறைவனே ஏக நாயகனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/135&oldid=1591105" இலிருந்து மீள்விக்கப்பட்டது