உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

111

என்றவாறு எல்லாம் இறைவன் செயலே தன் செயலாய்க் கொண்டாராய் உள்ள மெய்யுணர்வுடையாருக்கு ஏனைய வெல்லாம் வெறும் போலிகளாய் ஒழிதல் பொருத்தமேயாம். அங்ஙனம் அவர்க்குத் தோன்றுதல்பற்றி அவர் மற்றைச் சமயங்களை இகழ்ந்தார் எனத் திரித்துணர்ந்து அவரைப் புறம்பழித்தல் பொருந்தாதாம்.அது நிற்க,

இனி இங்ஙனம் மெய்ப்பொரு ளாராய்ச்சியின் பொழுது வேறுபாடுகளாய்த் தோன்றிய பல்வகைச் சமயங் களுள் முதற்கண் ஆராய்தற்பொருட் டெடுத்துக் கொண்ட சைவம் என்பது மிக உயர்ந்ததோர் அறிவினை யுடைய ஒரு சான்றோன் தனது சிற்றறிவுத் தன்மையை விட்டுப் பேரறிவினனாய் நின்று சிவம் என்னும் முழுமுதற் பெரும் பொருளைத் தலைப்பட்டு நின்ற நிலையாம். இது,

தெய்வஞ் சிவனே சிவனருள் சமயஞ் சைவஞ் சிவத்தொடு சம்பந்த மென்றான் சைவம் வளர்க்குஞ் சம்பந்த மூர்த்தி

என்ற திருச்செய்யுளான் அறியற்பாலதாம். இங்கே சிவம் என்று எடுத்தோதப்பட்ட பொருள், அசுத்த மாயையிற் றோன்றிய சத்துவம், இராசதம், தாமதம் என்னும் முக்குண வழிப்பட்ட மும்மூர்த்திகளுள் ஒன்றன்று. அது, “அவஸ்தா த்ரிதயாதீதம் துரீயம் ஸத்ய சித்ஸுகம், ப்ரஹ்ம விஷ்ண்வாதி பிஸ்ஸேவ்யம் ஸர்வேஷாம் ஜநகம், பரம் ஈசாநம் பரமம் வித்யாத்ப்ரேரகம் புத்திஸாக்ஷிணம்” என்று போந்த பஞ்சப் பிரமோபநிடத மறையானும், “தேவர்கோவறியாத தேவதேவன்’ என்னுந் திருவாசக மறையானும் அறியற் பாலதாம். இன்னுமிது, “சிவனொ டொக்குந் தெய்வம் தேடினுமில்லை”

என்னுந் திருமந்திரத்தானும் உணரப்படும். சிவம், பிரமம், கந்தழி யென்பன ஒரு பொருட்கிளவிகள், இவற்றுட் கந்தழி என்பதுஆசிரியர் தொல்காப்பியனாராற் சிவம் என்பதனோ டொத்த சொல்லாக வைத்துக்

கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றுங் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/136&oldid=1591106" இலிருந்து மீள்விக்கப்பட்டது