உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

❖ ✰ மறைமலையம் – 27

என்று திருவாய் மலர்ந்தருளப்பட்டதென. இதற்குரை கண்ட நச்சினார்க்கினியர் கந்தழி என்பது ஒருபற்று மற்று அருவாய்த் தானேயாய்த்தத்துவங்கடந்த பொருள்” எனக் கூறி, இதனியல்பை மாணிக்கவாசக சுவாமிகள் உய்த்துணர

வைத்து,

உற்றவாக்கையினுறுபொருள் நறுமல

ரெழுதரு நாற்றம்போற்

பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள் அப்பொருள் பாராதே பெற்றவாபெற்ற பயனது நுகர்ந்திடும் பித்தர்சொற் றெளியாமே அத்தனாண்டுதன் னடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே

என்றுதிருவாய் மலர்ந்தருளிய அருமைத் திருப்பாட்டினை எடுத்துக்காட்டி ‘என்று அதனை உண்மையான் உணர்ந்தோர் கூறியவாற்றானுணர்க' என்று அடிகளின் மெய்யுணர்வின் பான்மையினையும் கிளந்தெடுத்துரைத்தார். உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியரே திருவாதவூரடிகளை ‘அதனை உண்மையான் உணர்ந்தோர்' எனச் சிறந்தெடுத் துரைத்தமையாற் கந்தழியினியல்பை அத்திருமொழியே இனிது விளக்குவதென்பது பெற்றாம். பொருள்களாவன மண், புனல்2 அனல், கால், விசும்பு என்னும் ஐந்து பருப் பொருள்களும், மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்து நுண்ணிய பொருள்களும், கை, கால், வாய், எருவாய், கருவாய் என்னும் ஐந்து தொழிலுறுப்புகளும், மனம், அறிவு, நினைவு, முனைப்பு என்னும் நான்கு அகக்கருவிகளும், காலம் பிறழாநிகழ்ச்சி, கலை, நினைப்பு, விருப்பு, மகன், மாயை என்னும் ஏழு உணர்வு நிகழ்ச்சிப் பொருள்களும், தூய நினைவு, தலைமை, அருள்நிலை, அன்னை, அத்தன் என்னும் ஐந்து சிவ நிலையப் பொருள்களுமான முப்பத் தாறுமாம்.

இம் முப்பத்தாறு பொருள்களுங் கடந்த பேரறிவுப் பாருள் யாது? அது கந்தழியென்பார் 'தத்துவங்கடந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/137&oldid=1591107" இலிருந்து மீள்விக்கப்பட்டது