உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

113

பொருள்' என்றும், உருவுடைப் பொருளெல்லாம் நிலை யிலவாகலிற் படைக்கப்படும் உருவுடைப் பொருளன்று அக்கந்தழியென்பார் 'அருவாய்' என்றும், இம்முப்பத்தாறு பொருள்களும் அப்

பெரும்பொருளையின்றி இயங்க

மாட்டாவாகலின் அவற்றுள் நின்று அவற்றை இயக்கியும் தான் தாக்கற்று நிற்குமென்பார் ஒரு பற்றுமற்று' என்றும் நச்சினார்க்கினியர் இனிது விளக்கியருளினார். இவரெடுத்துக் காட்டிய திருவாசகத் திருச் செய்யுள் இக்கந்தழியாம் பெரும்பொரு ளியல்பை விளக்கு மாறு யாங்ஙன மெனின்; ‘உற்ற வாக்கையின் உறு பொருள்' என்பது இறைவன் பொருள்களுள் அருவாய் நிற்றற்கும், 'நறுமல ரெழுதரு நாற்றம்' என்பது அவன் உயிர்களுள் அருவுருவாய் நிற்றற்கும் உவமைகளாக எழுந்தன. உடம்பினுள்ளிருக்கும் உயிர் தனக்கென ஓர் உருவின்றித் தான் சார்ந்த உடம்பே தனக் குருவாய்க் கொண்டு நிற்கின்றது. அங்ஙனம் நிற்குமிடத்துத் தான் வேறு உயிர் வேறு என்னும் வேற்றுமை தோன்றாவாறு சாத்தா, கொற்றா என உடம்புக்கிட்ட பெயரால் அழைக் கும் வழித் தான் ஏன் என்கின்றது. அங்ஙனம் நிற்பினும் உடம்பு உடம்பே, உயிர் உயிரே; உடம்பு உயிராகாது, உயிர் உடம்பு மாய் அதனின் வேறுமாய் நிற்கும். உடம்பு தானே இயங்காது உயிர் இயக்கினால் இயங்கும், உயிர் தானேயி யங்கும் உடம்பினையும் இயக்கும்.

-

இதுபோல் இறைவன் உலகங்களுட் கலந்து நிற்கும் வழித்தான் வேறு உலகம் வேறு என்னும் வேற்றுமை தோன்றாவாறு ஒருமையுற்று நிற்கும். இவ்வாறு ஒன்றாய் நிற்றல் பற்றியே ‘விசுவம் பிரஹ்மா' என்னும் சொற் றொடரும், "உல கேழெனத் திசைபத்தெனத் தானொரு வனுமே, பலவாகி நின்றவா தோணோக்க மாடாமோ” என்னுந் தமிழ் மறைச் செய்யுளும் எழுந்தன. இங்ஙனம் ஒன்றாய் நிற்பினும் றைவன் இறைவனே, உலகம் உலகமே; உலக மிறைவனாகாது, றைவன் உலகமுமாய் அவற்றின் வேறுமாய் நிற்பன். உலகம் தானே இயங்காது இறைவன் இயக்கினால் இயங்கும்; இறைவன் தானேயும் இயங்குவன் பிறவற்றையும் இயக்குவன். இங்ஙனமெல்லாம் ஒற்றுமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/138&oldid=1591108" இலிருந்து மீள்விக்கப்பட்டது