உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L

114

❖ ❖ மறைமலையம் – 27

பூண்டு நிற்பினும் அவன் அதனாற் சிறிதும் வேற்றுமைப் படுவானல்லன். அது ‘நறுமலரெழுதரு நாற்றம்போல்' எனும் உவமையால் விளக்கப்பட்டது. மலர் முகையாய் ருந்துழி அதனுள் அருவாய் இருந்த மணம் அது நாள் முதிர்ந்து மலர்ந்த விடத்து அதனுள்ளும் புறம்புமாய்ப் புலப்பட்டு நிறைந்து தான் அம்மலரைப் பற்றிக் கொண்டு நிற்பினும், தான் அம்மலராற் பற்றப்படாது அதனையுங் கடந்து பரம்பித் தன் பரப்பினுள்ளே அம்மலரையும் ஒரு பால்அடக்கிக் கொண்டு வேற்றுமையும் வேற்றுமை யின்மையு மாகிய ஓர் ஒற்றுமை இலக்கணத்தோடு அதிற் சிறிதுந் தாக்கின்றி நிற்றல்போல, இறைவன் ஆணவமல வழிப்பட்டுக் குவிந்து நின்ற உயிரினுள்ளே உயிரினுள்ளே அருவாய் இருந்து பின் அம்மலத்தடை நீங்கி அது விரிந்தவழி அம்முழுமுதற் பேரறிவு அதன் உள்ளும் புறம்புமாய்ப் புலப்பட்டு விளங்கி, அத்தூயவுயிரை அங்ஙனம் பற்றி நிற்பினும் தான் அதனாற் சிறிதும் பற்றப்படாது அதனையுங் கடந்து பரம்பித் தனது அருள்வெளிப் பரப்பிலே அவ்வுயிரையும் ஒருபால் அடக்கிக் காண்டு வேறுமாய் ஒன்றுமாய் வேறல்லா வியைபுற்று அதில் சிறிதுந் தாக்கின்றி நிற்கு மென்க.

இங்ஙனம் அறிவுப் பொருள் அறிவில் அறிவில் பொருள் என்னும் ருவகை உலகத்தினும் வேற்றுமை யின்றி அருவுருவாய்த் தன்னியல்பிற் சிறிதுந் திரிவின்றித் தானேயாய் நிற்கும் இறைவனியல்பை இவ்வுண்மைத் திருமொழி ‘உற்ற வாக்கையினுறுபொருள் நறுமலரெழுதரு நாற்றம்போற், பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள்' என்று இனிது விளக்கினமையும், இவ்வுண்மையினை ஆசிரியர் நச்சினார்க் கினியர் காட்டினமையும் பெரிதும் நினைவு கூரற்பாலனவாம்; இவ்வுண்மை,

பூவினிற் கந்தம் பொருந்திய வாறு போல் சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது

ஓவியம் போல வுணர்ந்தறி வாளர்க்கு

நாவி யணைந்த நடுத்தறி யாமே

என்ற திருமொழியானும் விளக்கப்பட்டமை காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/139&oldid=1591109" இலிருந்து மீள்விக்கப்பட்டது