உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

123

தன்மை பெற்று நலமுறுதற்கு வாயிலான நன்முறைதான் திருவுருவ வழிபாடாகும்.

ங்ஙனம் விறகின்கண் மறைந்து கிடந்த தீ அவ் விறகினை ஒன்றோ ஒன்றோடொன்று தேய்த்துக் கடைந்தவழி அதிற்றோன்றி நின்றவாறு போலவும், பாலின்கண் மறைந்து அளாவி நிறைந்த நெய் அதனைக் காய்ச்சிக் கடைந்தவழி யதன்கண் வெளிப்பட்டு நின்றவாறு போலவும், யாண்டும் பரந்து நிற்கும் இறைவன், உயிரினைக் கீழ்க்கோலாகவும் ங்காரவுணர்ச்சியை மேற் கோலாகவுங் கொண்டு அன்பென்னுங் கயிறுகட்டி யிழுத்துக் கடை யே வெளிப்பட்டுத் தோன்றிநின் றருள்புரிவனென்பது பற்றியே, விறகிற் றியினன் பாலிற் படுநெய்போன் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவு கோனட் டுணர்வு கயிற்றினான் முறுக வாங்கிக் கடைய முன்னிற்குமே

என்னுந் தேவாரத் திருப்பாட்டும், இந்திரந் துருக வென்மனத் துள்ளே யெழுகின்ற சோதியே யிமையோர் சிரந்தனிற் பொலியுங் கமலச் சேவடியாய் திருப்பெருந் துறையுறை சிவனே

6

நிரந்த வாகாய நீர்நிலந்தீகா

லாயவை யல்லையா யாங்கே

கரந்த தோருருவே களித்தன னுன்னைக் கண்ணுறக் கண்டுகொண் டின்றே

எனவும்,

“சோதியாய்த் தோன்று முருவமே யருவாமொருவனே சொல்லுதற்கரிய வாதியே”

எனவும் போந்த திருவாசகத் திருமொழியும்

“நிறுத்திடு நினைத்தமேனி நின்மல னருளினாலே" என்னுஞ் சிவஞானசித்தித் திருப்பாட்டும்,

யவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/148&oldid=1591118" இலிருந்து மீள்விக்கப்பட்டது