உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

7. திருவுருவ வழிபாடு

அப்

அறிவிலுருவமாகக் காணப்படும் இப்பருப்பொரு ளுலகம் போற் காணப்படுவதுமன்றாய், அறிவிலருவப் பொருள்களாகிய வளியும் வானும்போலுணர்ந்துரைக்கப் படுவது மன்றாய், அறிவுள்ள உயிர்ப்பொருள்போலறிந் துணரப்படுவதுமன்றாய்க், காண்பதற்கெல்லாம் பாலாய்க் கேட்பதற்கெல்லாம் அப்புறமாய், உரையளவு சென்று முடிவிடங் கடந்ததாய் மனவுணர்வு சென்று பற்றுதற்கு ஏலாதாய், அறிவினுளறிவாய், உயிரினுள் உள்ளு யிராய், எல்லா வுலகங்களும் எல்லா உயிர்களும் தனது அருள் வெளிப்பரப்பின் கண்ணே மடங்கி யடங்கிக் கிடப்ப அவற்றின்மேல் விரிந்து சென்று முடிவிட மறியப் படாத பெரும் பரப்புடையதாய், அறிவும் இன்பமுமாம் வடிவ வுண்மைப் பொருளாய், எல்லா ஆற்றலும் உடையதாய்ப் பேரின்பம் நிரம்பித் ததும்பும் பெருங்கடலாய்ப் பேரருட் களஞ்சியமாய் விளங்கும் முழுமுதற் கடவுளைச் சிறுகிய அறிவுஞ் சிறுகிய தொழிலும் சிறுகி யறிந்த தனையும் மறந்து மறந்தறிதலும்மயங்கி யறிதலுமுடைய சிற்றுயிர்கள் உணர்ந்து வழிபடுதல் கூடாமையால் அருட்பெருங் கடலாகிய அவ்விறைவன் தன்னை யவ்வுயிர்களுணர்ந்து வழி பட்டு உய்யும் பொருட்டு ஒரோரு காலங் களிலோ ரோரிடங்களில் ஓரோ ரன்பர்க்குக் கன்றை நினைந்துவரும் புனிற்றா போலவும், விறகின்கட் பிறந்த தீப்போலவும், மோரின்கட் டிரண்ட வண்ணெய் போலவும், வித்தின் கட் பிழிந்தெடுத்த எண்ணெய் போலவும் வெளிப்பட்டு அவர்க்கு அருள் செய்த அருட்டிருக் கோலங்களை மெய் யன்புடையராகி மன வொருமைப்பாடு கொண்டு நினைந்து நாவுரை குழறக் கண்ணீருங் கம்பலையுந் தங்குறிப்பின்றியே நிகழ வழிபட்டுச் சிற்றறிவுத்தன்மை விட்டுச் சிவவறிவுத்

L

மய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/147&oldid=1591117" இலிருந்து மீள்விக்கப்பட்டது