உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மையா

  • சைவ சித்தாந்த ஞான போதம்

மென்பதும்,

னி

121

அம்முடிநிலைக்கண்

உள்ளார்க்குக் கீழ்நிலைகளினுள்ளன போலியாகத் தோன்றுதல் குற்றமாகாதென்பதும், இனிச் சைவமென்பது சிவத்தைப் பொருளாக உடையதென்பதும், சிவமென்பது தொல்காப்பியர், நச்சினார்க்கினியர், மணி வாசகப் பெருமான் முதலிய பேரறிவாளரால் விளக்கப் பட்ட படி எப்பொருளுங் கடந்த அருவப் பொருளா மென்பதும், இத்தகைய முழுமுதற் பொருளை ஆராய்ந்தறிந்த நிலையே சைவ சமயமா மென்பதும், அம்முழுமுதற் பொருளைச் சிவம் என்று வழங்குதலே பண்டை மறை முதலான தொன்னூற் கருத்தா மென்பதும், இப்பெற்றிய தான அம்முதற் கடவுளுண்மையை ஒரோ ஒருகால் வேறு வேறு பெயரிட்டு வழங்கினும் அதுசைவத்திற்கு இழுக்கா வதில்லை யென்பதும், இங்ஙனம் பொதுநிலை யுண்மையும் அருளறமும் விளக்க வந்த இரண்டு சைவ விளக்கங்கள் திருஞானசம்பந்தப் பருமானும் மெய்கண்ட தேவருமாவ ரென்பதும், இவர் இருவரும் வியத்தகும் அருட்பிறப்பின ராம் என்பதற்கு அவர் வரலாறுகளிலுள்ள உட்பொருள்களே சான்றாமென்பதும் இதன் கண்ணே தொகுக்கப் பட்டன.

1.

2.

அடிக்குறிப்புகள்

ஈசாவாசியோப நிடதம் 4,

மண் புனல் அனல் கால் விசும்பு என்பவற்றைப் பிருதிவி அப்பு தேயு வாயு ஆகாயம் என்றும், மெய் வாய் கண் மூக்குச் செவி என்பவற்றைத் தொக்கு சிங் குவை சட்சு ஆக்கிராணம் சோத்திரம் என்றும், சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்பவற்றை ரசம் ரூபம் பரிசம் சத்தம் கந்தம் என்றும், கை கால் வாய் எருவாய் கருவாய் என்பவற்றைப் பாணி பாதம் வாக்கு பாயுரு உபத்தம் என்றும்; மனம் அறிவு நினைவு முனைப்பு என்பவற்றை மனஸ் புத்தி சித்தம் அகங்காரம் என்றும், காலம் பிறழா நிகழ்ச்சி கலை நினைப்பு விருப்பு மகன் மாயை என்பவற்றைக் காலம் நியதி கலை வித்தை அராகம் புருடன் மாயை என்றும், தூயநினைவு தலைமை அருள்நிலை அன்னை அத்தன் என்பவற்றைச் சுத்தவித்தை ஈசுரம் சாதாக்கியம் சத்திசிவம் என்றும் வடநூலார் வழங்குப

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/146&oldid=1591116" இலிருந்து மீள்விக்கப்பட்டது