உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ய

120

மறைமலையம் - 27

கட்டளையிட்டு முதற்கண்ணே ஓங்காரத்தை நிறுத்தி யருளினார், இவ்வாறே மெய்கண்டதேவர் தம் சிவஞான போதத் திருமொழியுஞ் சுத்தவயிந்தவத்திற் றோன்றிய பரநாத வொலிகளாம். இன்னும் இவற்றின் நுட்பங்களெல்லாம் நல்லாசிரியனை யடைந்து அவனறிவுறுக்கும் அறிவுரை வாயிலான் அறியற்பாலன வாகலின் அவற்றையினி இங்கு விரியாது விடுகின்றாம்.

துகாறுங் கூறியவாற்றால் முதலிற் சைவமென்பது யாது என்று ஆராயப் புகும்வழி அவ்வறிவு ஒழிந்துபோகும் பொருள் போலாது அழியாப் பொருளாய் எல்லா உயிர்கள் மாட்டுந் தொன்றுதொட்டே உள்ளத்திற் பதிந்திருக்குமா மென்பதும், சமயம் என்பது பொழுது, காலம், அவசரம் என்று பொருள் படுவதாகலிற் காலத்தினாலும் இடத்தி னாலும் வரையறுக்கப் டத்தினாலும் படுவதால் சிறுபான்மை அறிவு விளக்கமுடைய உயிருக்கன்றி முற்றறிவு விளக்கமுடைய முதல்வற்கு இல்லையாமென்பதும், உயிரும் இறையும் என இரண்டில்லை முழுமுதற் பொருளே ஐம்பொறி அசைவால் உயிர்போலத் தோன்றுகின்றதென்று கூறும் ஏகா ஏகான்ம வாதவுரை உயிரின் அறிவியக்கமின்றி ஐம்பொறிகள் இயங்கமாட்டா என்று காட்டப்படுவதனால் மறுக்கப்படு தலின் அது பொருந்தாதாமென்பதும், இங்ஙனம் உயிர் ஐம்பொறிகளின் வாயிலாய்ப் புலன்களை உணரும் காலங்களெல்லாம் அதற்குத் தனித்தனியே ஒவ்வொரு பொழுதுகளாமென்பதும், அங்ஙனம் உணரும் வழியும் உயிர்க்கு யாதானுமொரு பொறிவழிவரும் இன்பத்திலேயே விருப்பம் மிக்குப்படுமென்பதும், அங்ஙனமெல்லாம் மிக்குச் செல்லுகின்ற உயிரின் பொழுது வேறுபாடுகளைச் சமயங் கள் என்று வழங்காமை அவை உடம்போடு உடன் அழித லினாலேயா மென்பதும், உண்முகமாகச் செல்லும் அறிவாராய்ச்சியே சமயவாதற் குரித்தா மென்பதும், அவ்வாறு செய்யப்படும் உண்முக அறிவாராய்ச்சியும் பல திறப்படுகின்றன வென்பதும், அவையே உலகாயதம் முதலிய பெயர்களான் வழங்கப்படலாயின வென்பதும், அவை யொவ்வொன்றுங் பயன்படுதலுடையனவே யல்லது பயனற்றனவாகா வென்பதும், இ து துவே முடிநிலையிலுள்ள சைவத்தின் பொதுநிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/145&oldid=1591115" இலிருந்து மீள்விக்கப்பட்டது