உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

119

தாமதம் என்னும் மூன்றியல்புகளிற் றாமத இராசதங்களைக் கடந்து தூய சத்துவத்திலே நின்றனரென்றும், தூயது தூவாதது இரண்டுங் கலந்தது என்னும் மும்மாயையுட் பின்னிரண்டனையுங் கழித்துத் தூயமாயையிலே நின்றன ரென்றும் அறிதல் வேண்டும்.

இன்னும் ஞானசம்பந்தப் பிள்ளையார்க்கு இறைவன் அம்மையப்பராய் எதிர்தோன்றி அவரை அழுகை தீர்ப்ப அம்மையார் மயார் அருமைத் அருமைத் திருமுலைப் பாலைப் பொற் கிண்ணத்திற் பிள்ளையார்க்கு ஊட்டினார் என்பதனால், அம்மையப்பரை ஒருங்கு நினைக்கும் உறைப்பினாலே பாம்பு சுழன்றாப்போலச் சுரித்துக் கொண்டிருக்கின்ற தூயமாயை யென்னுங் குண்டலிசத்தியானது சிவவழலாற் கண்விழித்து நாதத்தின் மேற்கண்ணதான அமிழ்தத்தைச் சென்று பற்ற அப்பொழுது ஒழுகும் அவ்வமிழ்த ஊற்றைப் பருகித் தூய சிவத்திலே சுட்டுணர்வற்ற நிலைகூடி நிற்குமாறு உணர்த்தப் பட்டபடியாம், எதிர்தோன்றிய அம்மையப்பரே உள்ளம் ஒருங்கி நினைக்கும் சக்தி சிவமாம். அவ்வுறைப்பின்கட் டோன்றும் சிவவனலே பொன்னொளியாம்; பொன் தீயின் கூறென்பது அளவைநூற் புலவரான அன்னம் பட்டர்க்கும் உடன்பாடு. அப்பொன்னொளியோடு கூடிய கிண்ணத்தின் வட்டவாய்வடிவே சுழன்றிருக்குங் குண்டலி யாற்றலாம்.

ரு

அக்கிண்ணத்திற் கறந்தூட்டப்பட்ட திரு முலைப்பாலே நாதத்தின் மேற்கண்ணதான திங்கள் மண்டிலத்தினின்றுருகி ஒழுகும் பேரின்ப அமிழ்த ஊற்றாம். அவ்வமிழ்த ஊற்றைப் பருகி ஒருபது நாடியினும் நிறைக்கவே ஒரு பஃதின்னோசை களுங் கேட்குமாதலின் அவ்வொரு பஃதின்னொலி விளக்கமே ஞான சம்பந்தப் பிள்ளையார் அருமைத் திருவாய் மலர்ந்த திருப்பதிகங்களாம். தூவாமாயையிற் றோன்றும் தூவா எழுத்தொலி வடிவான ஏனையோர் மொழிகள் போலாது, ஞானசம்பந்தப் பிள்ளையார் திருமொழிகள் பரவயிந்த வத்தின் கண்ணே தோன்றிய ஓங்கார விளக்கமாகும். இதனை அறிவுறுத்தற் பொருட்டே பிள்ளையார் தம்முடைய முதற்பதிகத்தின் முதலிலே "தோடுடைய செவியன்

என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/144&oldid=1591114" இலிருந்து மீள்விக்கப்பட்டது