உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

மறைமலையம் - 27

அகத்தே பரவிய ஆணவவல்லிருளை ஓட்டி எம் ஞானக் கண்களைத் திறப்பித்துச் சிவபெருமான் திருவருட் பேற்றைப் பெறுவிக்கின்றனர், ஞானசம்பந்தப் பெருமானும் மூன்றாம் ஆண்டிலே சிவனருள் நிரம்பப் பெற்றார். மெய்கண்ட தேவரும் மூன்றாம் ஆண்டிலே சிவனருள் நிரம்பப் பெற்றார், ஞானசம்பந்தர் தம் மூன்றாம் ஆண்டிலேயே வழுத்துரை வடிவான திருப்பதிகங்கள் கட்டளையிட்டுமறைவழியை விளக்கியருளினார். மெய்கண்ட தேவர் தாமும் மூன்றாம் ஆண்டிலே எழுத்தியல் வடிவான சிவஞானபோதங் கட்ட ளையிட்டு ஆகமவழியை விளக்கி யருளினார். மறைமொழி சூத்திரம் போலப் பொருட் சுருக்க முடைத் தாய்ப் பொதுவுற நிற்பது; ஆகமம் அச்சூத்திரத்திற் குரை போலப் பொருட் பெருக்க முடைத்தாய்ச் சிறந்து நிற்பது.

து,

வேதமொடாகமம்' என்னுந் திருமந்திரத்தானும்

உணரப்படும், அவையிவ்வா றிரண்டாயிருப்பினும் பொருண் முடிபால் ஒன்றேயாமென்பது சைவ பாடியகாரரான நீலகண்டர் "வயந்து வேத சிவாகமயோர்ப் பேதம்” என்றுரைத்தமையால் விளங்கும். து போல ஞான சம்பந்தர் திருமொழியான மறையும், மெய்கண்ட தேவர் திருமொழியான சிவஞான போதமும் பொருளறிவுறுக்கு முறையால் இரு திறப்படினும் பொருண்முறையால் ஒன்றே யாமென்பது பெறப்படுமென்க. அது நிற்க, அவ்விருவருங் குழந்தை களாயிருந்த பொழுதிலே தமிழ்மறையுந் தமிழ் ஆகமமும் தோன்றிய முறைமை நனிமறைந்த பொருள்களை உள்ளடக்கி நிற்கின்றது. காம, வெகுளி, மயக்க மென்னும் மும்மல வலியுஞ் சிறிதுந் தோன்றப் பெறாத காலங் குழந்தைப் பருவமேயாம். அப்பருவமொன்றே மிகவுந் தூயவான வேத சிவாகமங்கள் தோன்றுதற்குரிய தாகலின் அப் பருவத்திலே தான் அவர்க்கு அவை தோன்றுவவாயின. இன்னும் அவர்க்கு மூன்றாம் ஆண்டிலே அவை தோன்றின என்பதனால் பதி, பசு, பாசம் என்னும் மூன்றிற் பசுபாசநிலை கழன்று பதி

.

நிலையில் நின்ற பொழுது அப்பதிமொழிகள்

தோன்றினவென்றும், அவர் அப்போது சத்துவம், இராசதம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/143&oldid=1591113" இலிருந்து மீள்விக்கப்பட்டது