உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந் துய்ம்மினே

என்றும்,

ஒன்றென் றிருதெய்வ முண்டென் றிருவுயர் செல்வமெல்லாம் அன்றென் றிருபசித் தோர்முகம் பார்நல் லறமுநட்பும் நன்றென் றிருநடு நீங்காம லேநமக் கிட்டபடி

என்றென் றிருமன மேயுனக் கோருப தேசமிதே

117

என்றும் அருளிச் செய்த உண்மைகளைக் கடைப்பிடித்து ஒழுகுமின்கள்! நம்முடைய நாடு மத ஒற்றுமையின்மையால் நாளுக்குநாள் மழுக்கம் அடைகின்றது, சைவத்தின் முடிபுகள் எல்லாச் சமயங்களுக்கும் பொருத்தமாவனவாம், இதனை நீங்கள் செவ்விதின் மனம் பொருத்தி எல்லாரும் ஒற்றுமை யாய் வாழ்மின்கள்!

இத்தன்மையவான மத ஒற்றுமையும் அருள் ஒழுக்கமும் சைவத்தின் சிறப்பான உண்மைகளாம் என்பதனையே சைவ சமயாசிரியருள் முதல்வரான திருஞானசம்பந்தப் பெரு மானும், சைவ சித்தாந்த ஆசிரியருள் முதல்வரான மெய் கண்ட தேவரும் அறிவுறுத்தினர்கள், இரு சைவ விளக்கங் களான இவ் வாசிரியன்மார் இருவருள் ஞான சம்பந்தப் பெருமான் இற்றைக்கு ஆயிரத்து இரு நூற்றைம்பது ஆண்டுகளின் முன்னே சீர்காழி என்னும் ஊரிலே தோன்றியும், மெய்கண்ட தேவர் இற்றைக்கு அறுநூற்றைம் பது ஆண்டுகளின் முன்னே கம்பரை வைத்துப் பாதுகாத்து இராமாவதாரம் பாடுவித்த வெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப பிள்ளை மகளார் மணிவயிற்றிற் றோன்றித் திருவெண்ணெய் நல்லூரில் அமர்ந்தும் சைவத்தின் அரிய பெரிய உண்மைகளை எல்லா மக்களும் உணர்ந்து உய்யும்படி காட்டி நந்தாமணி விளக்கங்களாய்த் திகழ்ந்தனர்.

6

ஞாயிறு, திங்கள், தீ என்னும் மூன்று விளக்கங்களும் புறத்தே உலகத்திற் பரவிய இருளை விலக்கி எம்முடைய ஊனக் கண்களை மட்டும் விளக்குகின்றன. மற்று இந்நந் தாமணி விளக்கங்களான ஆசிரியன்மார் இருவருமே எம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/142&oldid=1591112" இலிருந்து மீள்விக்கப்பட்டது