உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

❖ ✰ மறைமலையம் – 27

இவ்வாறு சைவம் என்னும் மெய்ப்பொருளை ஆராய்ந்த நிலை எப்பொருளுங் கடந்த பெரும்பொருட் சிவத்தில் தலைப்பட்டு நிற்குங் கழிபெருஞ் சிறப்புணர்ந்தன்றே தாயுமான சுவாமிகள்,

1

66

சமயம்

சைவசமயமே சமயம்” என்று கட் என்று கட்டளையிட்டருளி னார். பிற சான்றோரும் சைவத்தின்மேற் வேறிலை” என்று கூறினார். மற்றைச் சமயங்களெல்லாம் சைவத் திற்குரிய படிவரிகளாய், நம்மாற் பாராட்டப்படுந் தன்மையவாய் நிற்றலின் அவை சைவசமயிகளான நம்ம னோராற் புறம்பழிக் கற்பாலன வல்லவாம். வேத மென்னும் மரத்தில் இலையும், தளிரும், அரும்பும், மலரும், பிஞ்சும், காயுமாய் மற்றைச் சமயங்களெல்லாம் நிற்ப, வேதாந்தம் என்பது அதன் முடிவிற் பழமாய்ப் பழுத்துத் “தானான தன்மையாய் நிற்ப, அதனைப் பிழிந்து எடுத்த சித்தாந்தம் “தானென்னுந்” தன்மையாய் நிற்குமென்ப தனைக் குமர குருபர சுவாமிகள் “நீயே, வேதமென்னும் பாதவம் வளர்த் தனை” என்பதனால் நன்றருளிச் செய்தனர்.

""

சைவ

இங்ஙனம் சைவ சமயத்தினால் அறிவுறுத்தப்படும் சிவம் எல்லாப் பொருளுங் கடந்ததாய் உண்மையறிவின்ப வடிவாய் எல்லா ஆற்றலுமுடையதாய் எல்லாவற்றையு மறிவதாய்ப் பிறப்பிறப்புக்களிற் படாத த தூய தூய அருண் மேனியுமுடை ய தாய்த் திகழ்வதென்று அறிமின்கள்! இவ்விலக்கணங்க ளெல்லாம் ஒருங்குடைய அப்பெரும் பொருளைச் சிவம் என்றழைக்க நுங்கட்கு விருப்பமில்லை யாயின் நாராயணன் என்றழை மின்கள்! பிரமனென்றழை மின்கள்! புத்தனென் றழைமின்கள்! அருகனென்ற

ழைமின்கள்! எப்பெயரிட்டு எவ்வெவ்வாறு அழைப்பினும் அப்பெயரெல்லாம் அவற்குப் பொருந்தும். வெறும் பெயரிலே நுங்கட்குப் போர் நிகழ வேண்டாம். எங்கும் உள்ள கடவுள் ஒருவனே. இது தருட்டுதற்கே திருமூலரும்

பட்டினத்தடிகளும்,

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/141&oldid=1591111" இலிருந்து மீள்விக்கப்பட்டது