உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

6

125

காலங்களில்

அப்பிற நாடுகளினும் ஒவ்வொரு அபரஞானப் பேறு கைவந்தவர்களாகிய தீர்க்கதரிசிமார் சிலர் தோன்றி ஆங்காங்குள்ள மக்கள் உய்யும் பொருட்டாக நல்லொழுக்க முறைகளையும் அபரஞான வுண்மைகளையும் அறிவுறுத்து வந்தார்களென்பதை அவரவர் தேசசரிதங் களானும் சமய நூல்களானும் அறிந்துள்ளோமாயினும் அத்தீர்க்கதரிசிமாரெல்லாம் இறைவனுடைய திருக்கோலங் களை நேரே கண்டு வழிபடுதற்குரிய நல்வினைப்பெறும் பரஞான முதிர்ச்சியும் உடையராகாமையால், அவர் தமக்கு அவ்விறைவன் வான்முகிலில் மறைந்துநின் றருள் செய்தன னென்றும், அடவிகளிலும் மலைக்குகைகளிலும் தாம் யங்கிக் கொண்டிருந்த காலங்களில் இறைவன் தம்மோடு உரையாடிய ஞானாலி கேட்டாரென்றும் அவர் சமய நூல்களிற் சொல்லப்பட்டதன்றி, அவ்விறைவனே யுருவங் கொண்டு அவர் கண்ணெதிரே தோன்றி யருள் செய்தா னன்றும் அவ்வாறு அருள் செய்த முதல்வன் திருவடை யாளங்களிவை குறிப்பிடப்படாமையான் அவரெல்லாம் இறைவன்றன் அருட்கோலங்களைக் கண்டு வழிபடும் முறைமை யறியாராயினர். அங்ஙனம் அறிய மாட்டாத அபரஞான தீர்க்கதரிசிமார் கூறிய அறிவுரை கடைப்பிடித்தொழுகிய ய மக்கள் அவர் கூறிய நன்னெறிப் பொருள்களை மனம் பொருந்த அமைத்து அவற்றின் வழிநடந்து, இறைவனை உண்மையான ஒரு திருவுருவத்தின் வைத்து வைத்து வழிபடும் 6 வழிபடும் முறைமை தமக்கு ளங்காமையால் தமக்கு விளங்கியவாறெல்லாம் வேறு புறவுருவங்களை அவ் விறைவன் அருளுருவங்களாகப் பிறழக் கொண்டு அவை தம்மையே வழிபடுகின்றனர், இனி நாவலந் தீவினராகிய நன்மக்களோ இறைவன் ஒவ்வோர் அன்பர் பொருட்டு ஒவ்வொரு காலங்களிற்

களைக்

என்றுங்

ரு

காண்ட அருட்கோலங்களாகிய சதாசிவன், மகேசுரன், அம்மை யப்பர், காளி, துர்க்கை, உமை, பிள்ளையார், முருகன், வைரவன் முதலியவற்றையே உண்மையான் வழி படுகின்றனர். அங்ஙனம் வழிபடப்படுவன வாகிய அருட்கோலங்கள் தாமும் மெய்யன்புடையார்க்கன்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/150&oldid=1591120" இலிருந்து மீள்விக்கப்பட்டது