உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

❖ ❖ மறைமலையம் – 27

யேனையோர்க்கு எளிவந்து விளங்குவன அல்லவாகலான், அவை வெளிவந்து அருள் செய்யப்பெற்ற மெய்யன்பர் தாங்கண்ட வாறே அவ்வருட்கோல அடை

6

யாளங்களை

அன்புததும்பி வழிய அறிவு வடிவாய் விளங்குந் தம் திருமொழிகளால் வகுத்துக் கூறிய முறைபற்றி மக்க ளெல்லாருந் தாமும் உய்யுநெறி தேடல் வேண்டிக் கல்லி னாலுஞ் செம்பினாலுந் திருவுருவங்கள் அமைத்து அவற்றை மறைபொருள் நுட்பங்களொடு கட்டப்பட்ட திருக்கோயில் களில் எழுந்தருளச் செய்து வழிபாடாற்றி வருகின்றனர்.

இனி, இவ்வாறு இவர்

வழிபடும்போதெலாம் கல்லினாலுஞ் செம்பினாலும் அமைக்கப்பட்ட பருப் பொருள் வடிவான அத்திருவுருவங்கள், அவ்வடையாளங் களையுடைய அறிவுப்பொருள் வடிவான அருட்கோலங் களை நினைவூட்டி, அவ்வருட்கோல வழிபாட்டின்கண் அவர் அறிவைப் பதியச் செய்து அவருக்கு உறுதி தருதலான் அது திருவுருவ வழிபாடு என்று வழங்கப்படுகின்றது. னிப் பிறநாடுகளிலுள்ள மக்களுக்கு உருவ வருட்கோலங்கொண்டு இறைவன் அருள் செய்த தில்லையென்பது மேலே இனிதெடுத்து விளக்கிக் காட்டினேமாதலால், அவர் தமக்குத் தோன்றியவாறெல்லாங் கற்பித்துக் கொண்ட பருப்பொருள் வடிவங்கள் தம்மை முதலாகவுடைய அறிவுப் பொருளுருவ வருட்கோலங்களை அவர்க்கு நினைவிலெழுப்பவும் அவரறிவை அவற்றின்கட் பதியுமாறு செய்யவும் மாட்டா தொழியும். ஒழியவே. அவர் கல்லானுஞ் செம்பானுமியற்றிய வடிவங்களிற் செய்யும் வழிபாடெல்லாம் அவ்வடிவங்களைக் கடந்து அறிவுருவ இறைவன் அருட்கோலத்தின்கட் செல்லா வாய் மடங்கி அப்பருப்பொருள் வடிவங்களின் கண்ணேயே செல்லுதலால் அவை விக்கிரகாராதனை என்று வழங்கப் படுகின்றன. ங்ஙனம் இந்நாவலந் தீவினராகிய நன்மக்கள் செய்து போதரும் திருவுருவ வழிபாடாகிய கடவுள் வழிபாடும், புறநாடுகளிலுள்ளவர்களாகிய மக்கள் மேற் கொண்

L

ழுகும் விக்கிரகாராதனையாகிய விக்கிரக வழிபாடுந் தம்முள் வேறுபாடுடையவாதல் உணராது இரண் டனையும் ஒன்றுபடுத்தி அவ்வாற்றால் நம்மனோர் மேற்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/151&oldid=1591121" இலிருந்து மீள்விக்கப்பட்டது