உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

127

செய்யுந் திருவுருவ வழிபாடாகிய நன்முறையை இகழுதல் பொருந்தாது.

மேலும், நாவலந் தீவினராகிய நம்மனோர் பகலவனை வழிபடும்போது அவனை ஓருடம்பாகவும், பர்க்கன் என்னும் பெயரோடு கூடிய இறைவனை அவ்வுடம்பினுள் ஓர் உயிராகவுங்கொண்டு தொழுவர். பிறர் அங்ஙனங் கொள்ள அறியாமற் பகலவனையே கடவுளாகக்

காண்

வணங்குவர். நம்மனோர் நிலவினை வழிபடும் போது அதனை ஓர் உடம்பாகவும், சோமன் என்னும் பெயரோடு கூடிய இறைவனை அதனுட் பரம்பிய முழுமுதற் பொருளாக வுங் கொண்டு வழிபடுவர். பிறரோ நிலவையே கடவுளாகத் துணிந்து தொழுவர். நம்மனோர் இவ்வூனுடம்பின்கண் ஓருயிர் இருப்பதுபோல அவ்வுயிரின் கண்ணும் பசுபதி என்னும் முதல்வன் உளனென்று கொண்டு வணங்குவர். பிறரோ அவ்வுயிரையே கடவுளெனத் துணிந்து வழி படுவர்.இவ்வாறே மண், புனல், அனல், கால், வான் என்னும் ஐம்பெரும் பொருள்களையும் அவ்வைம் பெரும் பொருள் களின் தொகுதியாக விளங்கும் இவ்வுலகினையும் இறை வனுக்கு உடம்புகளாகத் துணிந்து அம்முறையால வற்றை வழிபடும் நன்மக்கள் வழிபாட்டினியல்பு உணராது, அவை தம்மையே கடவுளெனப் பிறழ உணர்ந்து வழிபாடு புரியும் ஏனையோ ரொடுங் கூட்டி அவரை யிகழ்வார் உண்மை யறியாதவ ராவரென் றொழிக. இது பற்றியன்றே ஆங்கில நாட்டிற் புகழ்பெற்று விளங்கிய மாக்ஸ்மூலர்*” “ஜர்மானிய தொழிற்சாலைச் சிதர்துண்டுகள்' என்னும் முதற் புத்தக முகவுரையில், ‘நாவலந் தீவினரால் தழுவப் படும் விக்கிர காராதனையும் வேறே, ரோம் முதலிய நாடு களில் தழுவப் படும் விக்கிரகாராதனையும் வேறே, முன்னையதிற் விக்கிரங்கள்

கட

உடம்புகளாக

வுளின் வணங்கப்படுகின்றன.

பின்னையதில் விக்கிரகங்களே அவ்வாறு வணங்கப் படுகின்றன; இங்ஙனமாயின் இந்து மக்களை நாங் குறை கூறுதலென்னை?” என்னும் பொருள் தருமாறு எழுதுவாரா யினர். இன்னும், அவர் கடைசியாக வெளியிட்ட தமது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/152&oldid=1591122" இலிருந்து மீள்விக்கப்பட்டது