உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

❖ * மறைமலையம் – 27

'இந்தியர் ஆறு தத்துவக் கொள்கைகள் என்னும் புத்தகத்தில் திவ்விய தாஸ்தத்தர் என்பவர் எழுதிய ஒன்றை அறிவதற்குச் சொற்களும் பொருள்களும் அை யாளங்களாக இடர்ப்படுகின்றன: சொல் அடையாளங்கள் செவிணுயர்வுக்குக் கருவியாகின்றன; பொருள்கள் கண்ணறி விற்குக் கருவியாகின்றன. இவையே இவையிரண் டற்கும் வேற்றுமை, சொல் அடையாளங்களாகிய மொழிகளைப் பயன்படுத்தலில் எந்தச் சமயவாதியும் ஐயுறுதற்கு பெறாதபோது, இறைவனை வழிபடுதற்குக் கருவியாகிய பொருளடையாளங்களை ஐயுறுதல் என்னை?”” என்பதனை எடுத்துக் காட்டித் தம் துணிபு நிலையிட்டனர். இவ்வாறு உண்மையாக ஆராய்ந்து பார்க்க வல்லார்க்குச்

டம்

சைவ

நன்மக்கள் பண்டைக்காலந் தொட்டுக் கைக்கொண் டொழுகும் நன்முறையாகிய திருவுருவ வழிபாடு ஏனைச் சமயிகள் கொண்டு போற்றும் விக்கிரகாராதனை போல்வதன் றென்பதூஉம் அது பலவேறு வகைப்பட்ட உண்மை நுண் பொருட் பரப்பெல்லாந் தன்னகத்தடங்கக் கொண்டு இறைவனை எளிதிலுணர்ந்து வழிபட்டு உயிர்கள் வீடுபேற் றின்பம் பெறுதற்கு ஏதுவாகிய நிலையா மென்பதூஉம் இனிது விளங்கும்.

6

இனி, மேலே காட்டியவாறு ஏனைநாடுகளில் அபர ஞானப்பேறுற்றுத் தோன்றிய தீர்க்கதரிசிகளுக்கு முழு முதற்பெருங் கடவுள் உருவமாகத் தோன்றி அருள் செய்ய வில்லை என்றும், இந்நாவலந் தீவிலுள்ள திருத் தொண்டர் களுக்கு உருவ அருட்கோலங் கொண்டு எழுந்தருளி வந்து அருள் செய்தாரென்றுஞ் சொல்லிய பகுதியில் ஐயம் நிகழாமைப் பொருட்டு அதனை யீண்டெடுத்து விளக்கி ஒருசிறிது வலியுறுப்பாம்.

இனி, இறைவன் உருவவருட்கோலங் கொண்டு தமக்கு அருள்செய்த முறைமையினையும், அங்ஙனம் அருள் செய்யும் வழி இறைவன் கொண்ட திருவுருவ அடையாளங்களையுங் கண்டு அறிந்து அன்பு வெள்ளம் தம்மகம் நிறைந்து தளும்பி வழியப் பாட்டுக்களிலமைத்து வழிபட்ட திருத்தொண்டர் வரலாறுகளையும் ஆங்கில மொழியிற் பற்பல நாட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/153&oldid=1591123" இலிருந்து மீள்விக்கப்பட்டது