உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

129

வரலாறுகளையும் ஒத்து நோக்கிப் பார்க்குஞ் சிறந்த புலவரும் பிறரும் உண்மையாமெனத் துணிந்து தழுவி யொழுகு கின்றனர். இறைவன் றமக்குச் செய்த அருண்முறையைத் தாமே தம் பாட்டுக்களில் வேறு ஏதொரு குறிப்புமின்றி அவ் விறைவனை வழிபடுதல் ஒன்றே குறித்து அமைத்துப் பாடுதலா லங்ஙனம் அவர் சொல்லுந் தம்முடைய வரலாற்றுக் குறிப்புகளை அப்புலவோர் உண்மையாமெனக் கொண்டு ஒழுகக்

கடமைப்பட்டவராயினர்.

இனி, அவருள் ஒரு சாரார் இங்ஙனம் மெய்யன்புடைய திருத்தொண்டர் தாமே கண்டு கூறும் இறைவன் அருண் முறையைப் பொய்யென்று ஒழித்துவிடுதற்குக் கூடாமையால், அவ்வடியவர் கண்ட அவை யெல்லாம் உருவெளித் தோற்றங்க ளாவனவன்றிக் கடவுள் தாமே எழுந்தருளி வந்து அவர்க்கு அருள் செய்தனவாகாவெனவும் உரைத்து எதிர் வழக்குத் தாடுக்கின்றனர். அவர் சொல்லும் அவ்வுரு வெளித் தோற்றவியல்பை ஓர் எடுத்துக் காட்டின்கண் வைத்து விளக்கிக் காட்டுவாம்.இராமனுடைய வடிவ வழகைக் கண்டு விரும்பி அவனால் துன்புறுத்தப்பட்டுத் திரும்பிப் போகிய சூர்ப்பநகை தன் மூத்தோனாகிய இராவணனைக் கண்டு அவனுக்குச் சீதையின் பேரெழிலை விரித்து உரைப்ப, அதனைக் கேட்டு அவள்பாற் பெரிதும் விழைவு கொண்ட அவ் விராவணனுக்குத் திங்களைப் போற் றெளிந்து விளங்கு சீதையின் முகமும், அம்முகத்திற் குழைச்செவியளவுங் கிழித்துச் செல்லுங்கரிய பெரிய வரிகடை யொழுகு விழிகளும், முல்லை முகைபோற் குமிழ்த்த மூக்கும், பவளத்தை அறுத்துக் கடைந்து திரட்டி வைத்தாற் போலும் செவ்வாயும் அவ்வாயினகத்தே முத்து வரிசைபோல் திகழும் பற்களும், பளிங்குபோல் தெளிவாகிய கன்னங்களும், கரிந்த சுரிந்து நீண்டு கிடக்கும் மயிர்க்கற்றையும் பிற உறுப்புகளும் தன் விழியெதிரே தோன்றக் கண்டு மெய்ம்மறந்த களிப்புடைய னாகித் தன்னருகே நின்ற தங்கையை அழைத்து, 'இதோ தோன்றும் இவள் தானோ சீதை என்பாள்?' என்று வினாயினானென்றும். அதற்கு அவள், இராமன்மேற் கழிபெருங் காதல் கொண்டிருந் தமையால் தன்னெதிரே தோன்றிய அவ்விராமனது உருவெளித்

தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/154&oldid=1591124" இலிருந்து மீள்விக்கப்பட்டது