உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

மறைமலையம் 27

-

தோற்றத்தைக் கண்டு ‘செந்தாமரைக் கண்களும் செங்கனி வாயும் பரந்து திணிந்த மார்பும் முழங்கால் தடவுந் தடக்கை களும் உடைய ய வனே அவ் விராமனென்பா னென்று மறுமொழி தந்தாளென்றும் இராமாயணங் கூறாநிற்கும்.

காதன்

இவ்வாறு தோன்றிய உருவெளித் தோற்றங்கள் அவ்வவர்

மிகுதியால்

அவை

கண்ட

தோன்றியனவாகையால் உண்மையாகவே வெளிப்பட்ட அருட்கோலங்களாக மாட்டா; இதுபோலவே, முழுமுதற்பெருங் கடவுளிடத் திற்றமக்கு நிரம்பிய அன்பின் பெருக்கால் அவ்வடியவர்தாம் கண் உருவெளித் தோற்றங்களை உண்மையா மெனக் கொண்டு தஞ்செய்யுட்களிற் அமைத்துப் பாடினாராகலான், அவர் கண்ட அத்தோற்றங்கள் இறைவன் கொண்ட அருட்கோலத் திருவுருவங்களாமென்று துணிந்துரைத்தல் யாங்ஙனமெனின், கண்ணுக்கு மட்டுமே தோன்றி ஏனைப் பொறிகளுக்குப் புலனாகாத தோற்றங்களாயின் அவை நீர் கூறுமாறு பொய்யாமொழிந்திடும். அவ்வாறன்றிக் கண் ணினாற் காணப்படும் உருவமும், செவியினாற் கேட்கப்படும் ஓசையும். மூக்கினாற் கவரப்படும் இனிய மணமும். கையினாற் பற்றப்படும் வடிவமுங்கொண்டு பொருள் விளங்கச் சொற் சொல்லுதலும் நகுதலும் இயங்குதலுமுடைய தோற்றங் களாயின், அவை யெல்லாம் நீர் கூறுமாறு உருவெளித் தோற்றங்களாதற்கு ஒருவாற்றானும் ஏலாவாய், இறைவன் அவ்வன்பர்க்கு அருள் செய்தற் பொருட்டுக் அறிவுருவ அருட்கோலங்களேயா மென்பது இனிது துணியப் படும் அற்றன்று, அவ்வடியவர் தமக்குள்ள அளவிறந்த அன்பின் மிகுதியால் தம்மெதிரே தோன்றும் அவ் வுருவெளித் தோற்றங்களை நிற்பன போலவும் நடப்பன போலவும் பேசுவன போலவுஞ் சிரிப்பன போலவும் பிற செய்வன போலவு மெல்லாங் காண்பாராயின ரெனின்; அது கிடக்க, ங்ஙனம் வினா நிகழ்த்தும் நீவிரும் நிற்பீர்போலவும் நடப்பீர்போலவும் பேசுவீர்போலவுஞ் சிரிப்பீர்போலவும் உண்பீர்போலவும் உடுப்பீர்போலவுந் தோன்றுகின்றமை யின், நீவிரும் அங்ஙனம் பொய்யா யொழிந்திடுவீர் போலுமெனக் கடாவுவார்க்கு மறுமொழி கூறலாகாமையான்

கொண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/155&oldid=1591125" இலிருந்து மீள்விக்கப்பட்டது