உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

131

அவ்வாறு உலக வியற்கையோடு மாறுபட்டு மாறுபட்டு வினாதல் போலியாமென்றொழிக.

நன்று

இனி, இங்ஙனங் காட்டிய அளவை முறைகொண்டு, தமக்கெதிரே தோன்றும் உருவம் ஐம்பொறிகளானும் உணரப்படும் பெற்றியுடையதாயின் அஃது உருவெளித் தோற்ற மாவதின்றி, மெய்ம்மை வடிவுடைய தேவ வடிவமாமென்பது வலியுறுக்கப்பட்டதாயினும்,இத் தென்றமிழ் நாட்டிலுள்ள திருத்தொண்டர்க்கு வளிப்பட்ட அக்கோலங்கள் அங்ஙனம் ஐம்பொறியானும் உணரப்படும் அருட்கோலங்களாமென்பது அவ்வடியவர் திருச்செய்யுளி னின்றே எடுத்துக்காட்டி நுமது மேற்கோளை நிறீஇக்கொள்க என்பார் மகிழ்வுறல் வேண்டி அதுவுந் தந்து விளக்குவாம்.

மதுரை மாநகரிற் பாண்டியன் அவைக்களத்தில் தெய்வப் புலவராய் அமர்ந்திருந்த ஆசிரியர் நக்கீரனார், ஆலவாய்க் கடவுள் எழுதிய 3"கொங்குதேர் வாழ்க்கை” என்னுஞ் செய்யுட்குக் குற்றஞ் சொல்ல, அக்குற்றத்தைக் களைந்து கொள்ளும் பொருட்டும், அச்செய்யுளின் மெய்ம்மைப்பொருள் அவர்க்கு அறிவுறுத்தும் பொருட்டும் இறைவன் உருவ அருட்கோலம் தழுவி வந்த அவர்க்கு அதனை உணர்த்தியும் அவரதனை உணராமல் தாஞ் சொல்லிய குற்றத்தை நிறுத்தப் புகுந்த வழி, இறைவன் அவரது செருக்கை அடக்கி அவரைத் தூய்மை செய்தருள எழுந்த இரக்கத்தால் தன் நெற்றிக் கண்ணைத் திறந்து விழிப்ப, அதனினின்றுங் கிளர்ந்து தம்மைச் சுடும் அனலைப் பொறுக்கமாட்டாமல், மக்களுருவங் கொண்டு வந்த அப் பெருமானை அறிந்து தம் பிழையைப் பொறுத் தருளும்படி நக்கீரனார் அவ்விறைவனைக் குறையிரந்தி யற்றிய திருவெழுக் கூற்றிருக்கை என்னுஞ் செய்யுளில்,

சிறியேன் சொன்ன வறிவில் வாசகம் வறிதெனக் கொள்ளா யாகல் வேண்டும்

வெறிகமழ் கொன்றையொடு வெண்ணில வணிந்து

கீதம் பாடிய வண்ணல்

பாதஞ் சென்னியுட் பரவுவன் பணிந்தே

எனவும், அத் ‘திருவெழுக்கூற்றிருக்கை’ இறுதி வெண்பாவில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/156&oldid=1591126" இலிருந்து மீள்விக்கப்பட்டது