உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

❖ ❖ மறைமலையம் – 27

ஆல வாயி லமர்ந்தாய் -தணிந்தென்மேன், மெய்யெரிவு தீரப் பணித்தருளு வேதியனே யையுறவொன் றின்றி யமர்ந்து

எனவும், பெருந்தேவபாணியில்,

புத்தியு நீயே முத்தியு நீயே

சொலற்கருந் தன்மைத் தொல்லோய் நீயே, யதனாற்

கூட லாலவாய்க் குழக னாவது

அறியா தருந்தமிழ் பழித்தன னடியே

னீண்டிய சிறப்பி னிணையடிக் கீழ்நின்று

வேண்டு மதுவினி வேண்டுவன் விரைந்தே

எனவும், அதன் இறுதியிலுள்ள வெண்பாவில்,

விரைந்தேன்மற் றெம்பெருமான் வேண்டியது வேண்டா திகழ்ந்தேன் பிழைத்தே னடியேன் - விரைந்தென் மேற் சீற்றத்தைத் தீர்த்தருளுந் தேவாதி தேவனே யாற்றவுநீ செய்யு மருள்

தாமறியாதுபிழை

எனவுந்தாமே தமக்கு உண்மை யறிவிக்கும் பொருட்டு றைவன் உருவத் திருக்கோலங்கொண்டு வந்தானென்ப தூஊம், அவ்வாறு வந்த இறைவன் அருட்டிறத்தைத் செய்தாரென்பதூஉம், அதன்மேல் இறைவன் விழித்த நெற்றிக்கண் நெருப்புத் தம்மைச் சுடவே அவ்விறைவனைத்தாமறிந்து கொண்டா ரென்பதூஉம் நன்றாக எடுத்து மொழிந்திட்டார். ங்ஙனம் எடுத்து மொழிந்ததூஉம் பிறரை வஞ்சித்தன் முதலிய ஏதுவானன்றி றைவனை என்பெல்லாம் நெக்கு நெக்குருகி நெஞ்சம் நகிழ்ந்து கரைய வழிபட்டு அவன் அருளைப் பெற்றுக் காள்ளும் பொருட்டேயாமென்பது பொது வறிவுடை யார்க்கும் இனிது விளங்கும். இங்ஙனம் இறைவன் உருவ வருட்கோலந் தழீஇ. வந்து நக்கீரனார்க்கு அருள் செய்த வியத்தகு முறையை எவர்தாம் உருவெளித் தோற்ற மென்றுரைக்க ஒருப்படுவார்? எந்த நிரீசுவராதிதான் இதனை மறுக்கவல்லராவர்? அவ்வாறவர் பொய்யென்று மறுக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/157&oldid=1591127" இலிருந்து மீள்விக்கப்பட்டது