உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

133

விரும்பினால் இவற்றிற்கெல்லாம் வேறு யாதுதான்

வழிசொல்லமாட்டுவார்?

இன்னும் ஒன்று காட்டுவாம். உலகமெல்லாம் புகழ்ந்தேத்துஞ் சைவத் திருவாளராகிய மாணிக்கவாசகர் தாம் அமைச்சராயிருந்துழிப் பாண்டியன் தந்த பொருள் கைக்கொண்டு குதிரை கொள்ளும் பொருட்டுச் சென்ற வழியிற்கிட்டிய திருப்பெருந்துறைப் பூங்காவிற் சிவ பெருமான் ஓர் அந்தணர் வடிவங்கொண்டு மாணவர் பலர் புடைசூழவிருந்து தம்மை ஆண்டுகொண்டு அருள் செய்த முறையைத் திருவண்டப் பகுதியில்,

என்னே ரனையோர் கேட்கவந் தியம்பி யறைகூவி யாட்கொண் டருளி

மறையோர் கோலங் காட்டி யருளலும்

எனவும், போற்றித் திருவகலில்,

அருபரத் தொருவ னவனியில் வந்து குருபர னாகி யருளிய பெருமையை

எனவும், ஆனந்தாதீதத்தில்,

ஈறிலாதநீ யெளியையாகிவந் தொளிசெய்

மானுடமாக நோக்கியுங்

கீறிலாத நெஞ் சுடைய நாயினேன்

கடைய னாயினேன் பட்ட கீழ்மையே

எனவும், திருவம்மானையில்,

செங்க ணெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரிய பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி யெங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமு மாட்கொண்டு தெங்கு திரள் சோலைத் தென்னன் பெருந்துறையா னங்கண னந்தணனா யறைகூவி வீடருளு மங்கருணை வார்கழலே பாடுதுங்கா ணம்மானாய்

எனவும், அருட்பத்தில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/158&oldid=1591128" இலிருந்து மீள்விக்கப்பட்டது