உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

❖ ❖ மறைமலையம் – 27

நீதியே செல்வத் திருப்பெருந் துறையி னிறைமலர்க் குருந்தமே வியசீ ராதியே யடியே னாதரித் தழைத்தால் அதெந்துவே யென்றரு ளாயே

எனவும், பிரார்த்தனைப்பத்தில்,

கலந்து நின்னடி யாரோ டன்று வாளா களித்திருந்தேன்

எனவும், பின்பு அவ்விறைவனா ணைவழிநின்று பாண்டிய னிடத்திற் றிரும்பச் சென்று தாம் அங்கிருந்துழிக் குறிப்பிட்ட நாளிற் சிவபெருமான் நரிகளைப் பிடித்துக் குதிரைகளாக்கிக் கொண்டு ஒரு குதிரை மேற்கொண்டு தாமும் பாண்டி நாடு அடைந்து அவ்வரிய அருட்டிருக்கோலங் காட்டி யருள் செய்த அருட்டிறத்தைத் திருவேசறவில்,

ஒருங்குதிரை யுலவுசடை யுடையானே நரிகளெல்லாம் பெருங்குதிரை யாக்கியவா றன்றேயுன் பேரருளே

எனவும், கீர்த்தித் திருவகவலில்,

அரியொடு பிரமற் களவறி யொண்ணான்

நரியைக் குதிரை யாக்கிய நன்மையும் ஆண்டுகொண் டருள வழகுறு திருவடி பாண்டியன் றனக்குப் பரிமா விற்று

6 எனவும்,

6

மதுரைப் பெருநன் மாநக ரிருந்து குதிரைச் சேவ கனாகி யகொள்கை

எனவும்,

அரியொடு பிரமற் களவறி யாதவன் பரிமா வின்மிசைப் பயின்ற வண்ணமும்

எனவும், திருவம்மானையில்,

சிந்தனையை வந்துருக்குஞ் சீரார் பெருந்துறையான் பந்தம் பரியப் பரிமேற் கொண் டான்றந்த

வந்தமிலா வானந்தம் பாடுதுங்கா ணம்மானாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/159&oldid=1591129" இலிருந்து மீள்விக்கப்பட்டது