உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

எனவும், திருப்பொன்னூசலில்,

சால வமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து

ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான்

135

எனவும், அன்னைப்பத்திற், சட்டையிட்டுக் குதிரைமேல் வந்தாரென்பது தோன்ற,

பள்ளிக்குப் பாயத்தர் பாய்பரி மேல்கொண்டென்

னு ள்ளங் கவர்வரா லன்னே யென்னும்

எனவும், திருப்பாண்டிப்பதிகத்தில் அங்ஙனங் குதிரை மேல் உருவ வருட்கோலங் கொண்டு வந்த றைவனார் திருவுருவத்தையே தாம் நினைந்துருகினமை

புலப்படத்

6

தெரிவர நின்றுருக்கிப் பரிமேற்கொண்ட சேவகனா ரொருவரை யன்றியுரு வறியாதென்ற னுள்ளமதே

எனவும்,

பாரின்ப வெள்ளங் கொளப்பரிமேற் கொண்ட பாண்டியனா ரோரின்ப வெள்ளத் துருக் கொண்டு

தொண்டரை யுள்ளங் கொண்டார்

6 எனவும்,

பரவிய வன்பரை யென்புருக் கும்பரம் பாண்டியனார் புரவியின் மேல்வரப் புந்திகொளப்பட்ட பூங்கொடியார் மரவியன் மேல்கொண்டு தம்மையுந் தாமறி யார்மறந்தே

னிது

எனவும், பின்னர் அடிகளைப் பாண்டியன் வைகையாற்றில் நிறுத்தி நலிந்தவழி இறைவன் அவரை அந்நலிவு தீர்த்தற் பொருட்டு விடுத்த வெள்ளப் பெருக்கினால் வகை யாற்றின்கரை யுடைந்து நீர் பெருகுதலை அரசனுணர்ந்து அக்கரையை ஊரிலுள்ளார் அனைவருங் கட்டும் பொருட்டு நிலனளந்து கொடுப்ப, அங்ஙனந் தங்கடங் கட்குப் பிரித்துக் கொடுக்கப்பட்ட நிலங்களிற் கரை கோலிக் கொண்டு ஊரிலுள்ளா ரெல்லாரும் முயன்று கொண்டிருக்கையில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/160&oldid=1591130" இலிருந்து மீள்விக்கப்பட்டது