உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

-

மறைமலையம் - 27

உறவினர் யாருமின்றித் தனியாளாய்ப் பிட்டு விற்கும் பாருளைக் கொண்டு தன் வயிறு நிரப்பி அந்நகரில் உறைந்து கொண்டிருந்தவளும், ஆலவாய்க் கடவுளிடத்திற் பெருகிய மெய்யன்புடையளும் முதிர்ந்த ஆண்டினளுமான ஒரு ரு பிட்டுவாணிச்சி தனக்கு அரசனளந்திட்ட கரை நிலத்தைத் தானே திருத்திக் கட்ட மாட்டாமையானும் தனக்காகக் கூலியின்றித் தொழில் செய்வாரைப் பெறாமை யானும் பெரிதும் வருந்தி ஆலவாய்க் கடவுளிடஞ் சென்று அழுது ஞ் குறையிரப்ப, அவள் குறையினைச் செவிமடுத்த அருளுருவின னான பெருமான் ஓர் ஒட்டனைப் போல் வடிவங்கொண்டு போந்து ‘அம்மே! கூலிக்கு ஆள் வேண்டு மோ?' என்ன, அவள் 'அப்பா! நான் கூலி கொடுக்கப் பொருள் சிறிதுமில்லாத வறுமையுடையேன்; நாடொறும் பிட்டுவிற்று அதில்வரும் சிறியதோர் ஊதியப் பொருளைக் கொண்டு வயிறு வளர்க்கின்றேன்; தீவினையேன் என் செய்வேன்! என்ன, அவன் ‘அம்மே! நீ சுடும் பிட்டில் உதிர்ந்து போகும் பாகங்களை யேனும் எனக்குக் கூலியாகக் கொடுக்க ஒருப்படுவையேல் உனக்காகத் தொழில் செய்வேன்' என்றுரைப்ப.

தடை

அம்முதியோள் பெரிதும் அகமகிழ்ந்து ‘அப்பனே! அவ்வாறே தருவேன், நீ தொழில் செய்துவா' என்ன, அவர் அவ்வாறே தொழில் செய்வதுபோல் மாயஞ் செய்து டையிடையே யவளிடஞ் சென்று அம்மே! எனக்கு நிரம்பவும் பசிக்கின்றது; உதிர்ந்த பிட்டுணவு கொடு' என்று கேட்டுப் பெற்றுண்டு பிச்சனைப் போற் கூத்தாடிக் கொண்டு கரைகோலாது நாளைப்போக்க, அன்று மாலையில் அரசன் ஊரார் கரைகோலியதனைக் காணவந்து எல்லார்க்கும் அளந்துவிட்ட நிலந் திருத்தப்பட்டிருத்தலையும் பிட்டு வாணிச்சி பங்கு அங்ஙனந் திருத்தப்படா திருத்தலையுங் கண்டு வெகுண்டு அதனைத் திருத்தவந்த கூலியாளாகிய ஒட்டனைத் தன் கையிலிருந்த பிரம்பாலடித்தலும்,அவ்வடி அடித்தவனாகிய

பாண்டியனை யுள்ளிட்டு அசையும் பொருள் அசையாப் பொருளாகிய எல்லாவற்றின் மேலும் உறைப்ப, ஒரு கூடை மண்ணால் அக் கரையைத் திருத்தி ஒட்ட வடிவங் கொண்டு வந்த இறைவன் மறைந்து சென்ற அருட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/161&oldid=1591131" இலிருந்து மீள்விக்கப்பட்டது