உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

137

டிறத்தை நினைந்து நினைந்துருகி அவ்வரசன் பக்கத்தில் அமைச்சராயிருந்து நேரிற்கண்ட மணிவாசகப் பெருமான்

தம் கீர்த்தித்திருவகவலில்,

ஆங்கது தன்னி லடியவட் காகப்

பங்காய் மண்சுமந் தருளி பரிசும்

எனவும், திருவம்மானையில்,

மண்சுமந்து கூலிகொண்4 டக்கோவான் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்கா ணம்மானாய்

எனவும், திருப்பூவல்லியில்,

திண்போர் விடையான் சிவபுரத்தார் போரேறு மண்பான்மதுரையிற் பிட்டமுது செய்தருளித் தண்டாலே பாண்டியன் றன்னைப் பணிகொண்ட புண்பாடல் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ

எனவும், திருக்கழுக்குன்றப் பதிகத்தில்

பிட்டுநேர்பட மண்சுமந்த பெருந்துறைப் பெரும்பித்தனே சட்டநேர்பட வந்திலாத சழக்கனே னுனைச்சார்ந்திலேன்

எனவுந் தாமே தமது திருவாயால் அவ்வருட்பாட்டு முறை யினையும், இறைவன் தம் பொருட்டுத் தாங்கிவந்த உருவ வின்ப வருட்கோல மரபினையும், அவ்வருட்கோலங்கொண்டு வெளிப்பட்ட பெருமான் நிகழ்த்திய திருவிளையாடன் மாட்சியினையும் விதந்து பலமுறை யெடுத்தோதி யருளிய வாறு காண்க. ஐம்புலன்களுக்கும் ஆரநுகர்ச்சியாம் படி திருக்கோலந்தாங்கிக் காணவுங் கருதவும் உரைப்பவும் வாராத தன்பெருமைத்தன்மைகளைத் தன் அன்பர் பொருட்டுக் காணவுங் கருதவும் உரைப்பவுமெல்லாம் எளிவந்தனவாக்கி வெளிவந்த முதல்வன்றன் பேரருட் டிறத்தை அன்பு நிறைந்த தூய உள்ளத்தோடு ஆராயலுறு வார்க்கு அவ்விறைவன் உருவமும் அருவமும் அருவுருவமு மாகிய எல்லா நிலையும் எய்தவல்ல எல்லா ஆற்றலுமுடைய வனாமென்பது நன்கு புலப்படும்.இங்ஙனம் விரிவா யெடுத்துக் காட்டிய உண்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/162&oldid=1591132" இலிருந்து மீள்விக்கப்பட்டது