உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

  • மறைமலையம் – 27

பொருடந்து முழுமுதற் கடவுளின் உண்மைத் தன்மையினை யறிவித்து ஆருயிர்களுக்குப் பெரிது பயன்படுவதொன்றாய் இருத்தலின், அவ் வுயிர்களுக்குப் பயன்படாத எட்டா நிலைமையினை உணர்த்துங் 'கடவுள்' எனுஞ் சொல்லினுஞ் சிவன்' எனுஞ் எனுஞ் சொல்லே சாலச் சிறந்த பெருமாட்சி யுடைத்தா மன்பது. இதனைச் சைவ சமய மாட்சி' என்னும் விரிவுரையில் விரித்து விளக்கியிருக்கின்றே

மாகலின், இவ்வளவில் இச் 'சிவம்' எனுஞ் சொற்சிறப்புக் கூறுதலை நிறுத்தி மேற் செல்வாம்.

இனி, இங்ஙனம் பேரின்ப நிலையனாய் நிற்கும் இறைவனைச் சிற்றறிவுஞ் சிறுதொழிலும் உடையராகிய மக்கள் தாமாகவே அறியப் புகுந்தால், அவர் அவனைச் சிறிதும்அறியமாட்டுவாரல்லர். அங்ஙனம் அறியப்படாத ஐயனை அறியாதுவிடின் அவர் தாமே தம் அறியாமை யினையுந் துன்பத்தினையும் நீக்கிக் கொண்டு பேரின்பத்தைப் பெற மாட்டுவாரும் அல்லர். ஈன்றணிய குழவி பசியெடுத்த போதெல்லாம் வீறிட்டழுது துன்புறுமேயல்லாது, தன் அன்னையின் முலையைக் கௌவிப் பால் பருகித் தன் கொடும்பசி தீர்த்துக் கொள்ளுதலை அறியாது; மற்று அதன் மாட்ட ா நிலைமையினை யுணர்ந்த அன்னையே அதன் பசித் துன்பங் கண்டு பொறாளாய் நெஞ்சங் குழைந்து அதனை யெடுத்துத் தன்மார்போடணைத்துத் தன் முலைக் காம்பையும் அதன் வாயினுட் புகுத்தி, அவ்வாற்றால் அம் மதலை ஆண்டு நிறைந்த பாலைப் பருகிப் பசி தீர்ந்து களிக்கச் செய்கின்றாள்.இந் நிகழ்ச்சியைப் போலவே, அறியாமையிற் கிடந்து துன்புறும் இளங்குழவிகளாகிய நாம் எல்லாம்வல்ல றைவனாகிய அன்னையிடத்துத் தேங்கி நிற்கும் பேரின்ப அமிழ்தத்தை நுகரும் வகையறியாமல் துயருறல் கண்டு எம் ஐயனே எமக்கு மிக இரங்கி எல்லையற்ற தனது அருளுரு வினை யாம் உணர்தற்கு எளிதா ஓர் எல்லையுள் அடக்கிக் காட்டி எமக்கு அப்பேரின்ப அமிழ்தை ஊட்டும் அருள் நிலையனாய் நிற்கின்றான்.இவ் வுண்மை யினையே

மாணிக்கவாசகப் பெருமான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/209&oldid=1591179" இலிருந்து மீள்விக்கப்பட்டது