உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காள்ளல்

சைவ சித்தாந்த ஞான போதம்

வேண்டும்,

183

யாம் நாடுமாறு இவ்வுலகத்துஇன்ப நுகர்ச்சியை அதற்கொரு சிறந்த கருவியாய் அமைத்திருக்கின்றன னென்று உணர்ந்து இப்பேரின்பப் பெருந்தேன் வெள்ளமானது எங்கும் பெருக்கெடுத்துக் கிடந்தும் அதனைச் சிற்றுயிர்கள் தமதறியாமையால் உணராமை கண்டன்றோ,

காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர் அகண்டா காரசிவ போகம் எனும்பே ரின்பவெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய் ஏகவெளியாய்க் கிடக்குதையோ! இன்புற்றிட நாம்இனியெடுத்த தேகம் விழுமுன் புசிப்பதற்கே சேர வாருஞ் செகத்தீரே!

என்று தாயுமான அடிகளும் நம்மனோரை யெல்லாம் பரிந்தழைப்பாராயினர்! ஆகவே, என்றும் அழியாப் பேரின்பப் பேற்றை எய்துதலில் மக்கட் பிறப்பினரெல்லாரும் பெருவிழைவு

யற்கையாகவே

கொண்டவரென்பது,

அவ்வின்பத்தை முன்னறிவித்தற் கருவியாய்த் தோன்றுஞ் சிற்றின்ப நுகர்ச்சியில் அவர்க்கிருக்கும் ஆரா வேட்கையே சான்றாமாகலானும், சிற்றின்ப நுகர்ச்சிக்கு ஏதுவான உலகத்துப் பொருள்களெல்லாம் நிலையுதலின்றி அழிய அச்சிற்றின்பமும் அவற்றோடு உடன் அழிதலின் அழிவிலாப் பேரின்பமானது இவ்வுலகியற் பொருள்களிற் பெறப்படுவ தன்றாய்த் தன்போல் அழிவிலா முதல்வனிடத்து மட்டுமே பெற்று நுகரற்பாலதா மாகலானும்அவ் வின்பத்தையும் அவ்வின்பத்திற்குக் கொள் கலனான முதல்வனையும் இடை யறாது நினைவிற் கொண்டு வருதலே அப்பேரின்பப் பேற்றினுக்குச் சிறந்த வழியாமாக லானும்,அந்நினைவினை அங்ஙனம் எளிதிற் றோற்று விப்பதற்கு அவ் வின்பத்தை உணர்த்துஞ் சொல்லொன்று இன்றியமை யாது வேண்டப்படு மாகலானும் பேரின்ப உறையுளாய்த் திகழாநின்ற முதல்வனுக்குச் ‘சிவன்’ என்பதே உறுபெருஞ் சிறப்புப் பெயராக ஆன்றோரால் எடுக்கப்படுவதாயிற்று. சிவன்' எனுஞ் எனுஞ் சொல் இன்பத்தை யுடையவன் யவன்' எனப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/208&oldid=1591178" இலிருந்து மீள்விக்கப்பட்டது