உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

❖ ❖ மறைமலையம் – 27

பேரின்பத்தைப் பெறுதற் பொருட்டாகவேயாம். அப் பேரின்பத்தை முன்னறிவிக்குங் கருவியாகவே இவ்வுலக வாழ்க்கையின் இடையிடையே சிற்றின்ப நுகர்ச்சியானது நடைபெறா நிற்கின்றது.

குடங் மாகக் கொணர்ந்து நிறைத்திருக்குந் தீம்பாலினையுங் குப்பி குப்பியாக நிரப்பி வைத்திருக்குந் தேனினையுங், குடலை குடலையாகத் தாகுத்துச் சேர்த்திருக்குந் தேமாங்கனியினையுந் தான் வேண்டியவாறு நுகருதற்கேற்ற பரிசாய்த் தானிருக்கும் இல்லத்திலேயே ஒருவன் எளிதாகப் பெற்றிருந்தும், அவற்றின் சுவையினையும் உண்டால் அவை தனது கொடும் பசிதீர்த்துத் தன் உடம் பினைக் கொழுமையாக வளரச் செய்தலையும் உணராத மடவோன் ஒருவன் அவை தனக்குத் தீதுபயப்பதென அஞ்சி அவற்றை உட்கொள்ளானாய்ப் பசித்து வருந்தி

யிருப்ப, அவனைக் கண்டு இரங்கிய அருளுடையான் ஓர் அறிஞன் அவன்பாற் போந்து அவற்றின் சுவையினையும் பயனையும் அவனுக்கு எடுத்துக்காட்டி அறிவு தெருட்டி, அவை ஒவ்வொன்றிலுஞ் சிறிது சிறிதெடுத்து அவன் வாயினுட் பெய்து, அவ்வாற்றால் அவன் அவற்றின் இனிமை கண்டு அவை தம்மையுண்டுகளை தீருமாறு செய்தாற் போல, எல்லாம்வல்ல இறைவனுந் தன்பாலுள்ள பேரின்பக் கொழுந்தேறல் வெள்ளத்திற் சிற்றுயிர்களாகிய யாம் படிந்து கிடந்தும் எம்மைப் பொதிந்த ஆணவ வல்லிருளால் அறிவு மாழ்கி அவ் வின்பத்தினியல்பினை உணராது துன்புற்றிருக்க, அது கண்டு எமக்கு இரங்கி இவ்வுடம்பையும் இவ்வுடம்பின்கட் பல வியத்தகு கருவிகளையும் அமைத்து அவ்வாற்றால் யாம் அவ் வின்பத்தின்றன்மையினைச் சிறிது சிறிதே தம் மாட்டுத் தோற்றுவிக்கும் இவ்வுலகத்துப் பல் பண்டங்களையும் நுகர்ந்து நுகர்ந்து, 'இப்பருப் பொருள்களினூடே புலனாகி எம் அறிவைத் தன் வயப்படுத்திச் சிறிது நேரத்தில் மறைந்துவிடும் இச் சிற்றின்பமே இத்துணை விழுமிதாயின், எல்லையற்ற நுண்ணறிவுப் பொருளாய் “விளங்கும் ஆண்டவன்பால்" என்றும் “அழியாதாய் விரிந்து விளங்கா நின்ற பேரின்பச் சுவை எத்துணை விழுமிதாம்!” என உணர்ந்து அதனையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/207&oldid=1591177" இலிருந்து மீள்விக்கப்பட்டது