உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

181

அதனைப் பண்டைக் காலந்தொட்டு ஆன்றோர் வழங்கி வரலானார்கள். இவ் வியல்பினை உணர்த்துதற்கே மாணிக்க வாசகப் பெருமானுந்,

திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை உருநா மறியஓர் அந்தணனாய் ஆண்டுகொண்டான் ஒருநாமம் ஓர்உருவம் ஒன்றும் இலாற் காயிரந் திருநாமம் பாடிநாந் தெள்ளேணங் கொட்டாமோ

.

என்று அருளிச் செய்தனர். ஆகவே, இறைவனுக்கு ஒரு பெயரிட்டு வழங்குவது மக்களாகிய நாம் அவனை நினைந்து அவன் பாருட்டே யல்லாமல்,அவன் அப்பெயருடையனாய் இருப்பது பற்றி யன்றென உணர்தல்

வேண்டும்.

வயமாதற்

சால் ‘எப்

அற்றேல், எல்லாச் சமயத்தவர்க்கும் பொதுவான ‘கடவுள்’, ‘இறைவன்’, ‘முதல்வன்' முதலான சொற்க ளிருக்க அவற்றால் அவனை வழங்காமல், அவன் சைவ சமயம் ஒன்றற்கே யுரியான்போல் வைத்து அவனைச் 'சிவன் என்னும் பெயரால் அழைத்தல் என்னை யெனிற்; ‘கடவுள்’ என்னுஞ் சொல் ‘எப்பொருளையுங் கடந்தோன்’ என அவன்றன் எட்டா நிலைமையினையும், 'இறைவன்’ எனுஞ் பாருளிலுந் தங்குபவன்' என அவன்றன் எங்குமுள்ள நிலைமையினையும், 'முதல்வன்’ எனுஞ் சொல் அவன் எதற்கும் முற்பட்டவனாய் நிற்கும் அவன்றன் முதன்மை யினையும் அறிவித்தல் போலச், 'சிவன்' எனுஞ் சொல்லும் அவன் ஏனை எப்பொருளிலும் இல்லாத பேரின்பத்திற்கு உறையுளாய் உள்ளவனென்பதனை அறிவிப்பதொன்றாம். சிற்றுயிர்களாகிய நாம் அவன்றன் எட்டா நிலைமை யினையும் எங்குமுள்ள நிலைமையினையும் எல்லாவற்றுக்கும் முற்பட்ட முதன்மையினையும் உணர்தலாற் பெறும் பயன் சிறிது மின்றாம். நாம் தொன்று தொட்டு அறியாமையிற் கிடந்து துன்புற்று வருதலின், அறியாமையைக் க களைதற்கு அறிவும்,அவ் அறியாமையின் வாயிலாக வருந்துன்பத்தைக் களைதற்கு இன்பமுமே இன்றியமையாது வேண் நிற்கின்றோம். நாம் பிறவி யெடுத்ததன் நோக்கமெல்லாம்

டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/206&oldid=1591176" இலிருந்து மீள்விக்கப்பட்டது