உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

8. சிவலிங்க உண்மை

விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம் விந்துவதே பீடம் நாதம் இலிங்கமாம் அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய்

வந்த கருவைந்துஞ் செய்யும் அவைஐந்தே.

திருமூலர் திருமந்திரம்

சிவலிங்கம் எனப்படுந் திருவுருவ அடையாளத்தின்கண் வைத்து ஆன்றோர் அறிவுறுத்திய அரும்பெரு மெய்ப் பொருள்களை யாம்ஆராயப்புகுதலின், இவ் விரிவுரை 'சிவலிங்க உண்மை' எனப் பெயர் பெறுவதாயிற்று. 'சிவம்' என்பது முழுமுதற் கட வுளை யுணர்த்துஞ் சிறப்புப் பெயராகும்; 'லிங்கம்' என்பது அக்கடவுளின் உண்மைத் தன்மையை அறிவிக்குங் குறி அல்லது அடையாளத்தைக் காட்டுவதாகும். ஊரும் பேரும்இல்லாக் கடவுளுக்குச் ‘சிவம்' என்பதனைச் சிறப்புப் பெயராகக் கூறுதல் என்னை யெனின்; இறைவன் தன் நிலையிலே ஊரும் பேரும் ல்லானாயினும், எல்லா உலகங்களிலும் எல்லாப் பொருள் களிலும், எல்லா உயிர்களிலும் ஊடுருவி நிற்பானான அவன்றன் பெரும் பரப்பினை அறிந்து கொள்ளுதற்கேற்ற பேரறிவு வாயாமல், ஒவ்வோர் இடத்தின் எல்லையிலும் ஒவ்வொரு காலத்தின் எல்லையிலும் இருக்குஞ் சிறுசிறு பருப் பொருள்களையும் அப்பருப்பொருள்களினூடு புல னாகும் உயிர்ப் பொருள் களையுமே அறிதற் கேற்ற சிற்றறிவு வாய்ந்த மக்களாகிய நாம் அம் முதல்வன் இயல்பினை எளிதின் உணர்ந்து, அதனை நம் நினைவில் இடை டையறாது பதித்து, அவ்வாற்றால் நமதுயிரைத் தூய்தாக்குதற்குக் கருவியாகவே அவன்றன் உண்மைத் தன்மையினை நன்குணர்த்துஞ் ‘சிவம்’ என்னுஞ் சொல்லை அவற்குச் சிறந்த பெயராக இ இட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/205&oldid=1591175" இலிருந்து மீள்விக்கப்பட்டது