உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

❖ ✰

மறைமலையம் - 27

அற்றாயினும், எல்லாம்வல்ல கடவுள் சிற்றறிவின ராகிய நம்மனோரறிவுக்குப் புலனாகா நிலையிலேயே நிற்கக் காண்டுமன்றி, நம்மனோரறிவுக்குங் காட்சிக்கும் எளிதிற் புலனாவதொரு நிலையில் நிற்றலைக் காண்கிலமாலெனிற், கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அழுவார் போலவுங் கொழுஞ்சுவை நீர்ததும்பு குளக்கரையி லிருந்தும் விடாய்த்து வருந்துங் குருடன் போலவும், நம்மனோர் தமக்கு அண்மையிலே கடவுளைக் கட்புலனாற் காணும் பெரும் பேறுடையராயிருந்தும் அவனைக் காணா தார்போல் ஏக்கமடைந்திருக்கின்றனர்! ஈன்றணிய குழவி வளர்ந்து தன்னிலையைத் தான் உணரும் வரையில் அதனைப் பெற்ற தாய் தந்தையர் அதன் பக்கத்தே யிருந்தே அதற்கு அவ் வுணர்வினை எழச் செய்தாலன்றி, அஃது அவ்வுணர்வு கைகூடப் பெறாதவாறு போல, அறியாமை யிலழுந்தி அறிவின்றிக் கிடக்கும் நம்மனோர்க்கும் நம் ஆண்டவன் அருகே யிருந்து அறிவு துலக்கினாலன்றி நாமும் அறிவு கைகூடப் ப் பெறுதல் ஒருவாற்றானும் இயலாது. குழந்தை வளர்ந்துஅறிவு பெற்ற பின் அப்பிள்ளைக்காயினுந் தாய் தந்தை யருதவி வேண்டப்படுவ தின்றாய் ஒழிகின்றது; தாய் தந்தையருஞ் சில காலத்தில் இல்லையாய் ஒழிகின்றனர்; ஆனால் அறியாமையிற் கிடக்கும் உயிர்களுக்கோ அவை அவ்வாறு அறிவின்றிக் கிடக்கும் அக்காலத்தும், அவை அறிவு பெறும் பிற்காலத்தும், அறிவு பெற்ற மற்றைக் காலத்தும் அவை தம்மை உரிமைப் பொழுதும் பிரியா துடனிருந்து அறிவு தெருட்டி இன்பத்தை யருத்துபவனாய் இறைவன் எஞ்ஞான்றும் அவ்வுயிர்கட்கு அண்ணியனாகவே விளங்கி நிற்கின்றான். அங்ஙனம் நமக்கு எளியனாய்

அண்மையில் நிற்கும் ஆண்டவனை ஆராய்ந்து அறியாக் குறை நம்மனோர் பால் உளதேயன்றி, நமக்கு அரியனாய் நிற்குங் குறைபாடு அவன்பாற் சிறிதுமில்லை.

அற்றேல், அத்துணை யெளியனாய நம்மனோர்க்கு அருகில் நிற்கும் ஆண்டவனை நாம்அறிந்து கொள்ளுமாறு யாங்ஙன மெனிற் காட்டுதும்; எல்லாம் வல்ல இறை வனியல்பு களை ஆராய்ந்து பார்த்து, அவ்வியல்புகள் அவ்வளவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/211&oldid=1591181" இலிருந்து மீள்விக்கப்பட்டது