உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

187

நமக்குப் புலனாகும் பொருள்களில் எதன்கண் எவ்விடத்து அமைந்து காணப்படுகின்றன என்பதைத் தெளிய அறிவோ மாயின், அதன்கண் அவ்விடத்து இறைவன் நமக்கு நேர் நிற்றலையும் நாம் தெளிந்து கொள்ளு தல் இயலும். காற்றைக் கண்ணாற் பாராதவன் அஃது எம் முகமாய் வீசுகின்றதென அதனியல்பை ஆராய்ந்து அஃது இயங்கும் இடத்தை யறிதல் காண்டுமன்றே? நறு விய செங் கழுநீர் மலரைக் காணாதவன் அதன் மணம் வந்து கமழும் வழியை யாராய்ந்து கொண்டு சன்று அதனைக் கண்டு மகிழ்தலும் அறிதுமன்றே? இங்ஙனமே கடவுளி யல்புகள் எதன்கண் எவ்விடத்தே புலனாகின்றன வென்று ஆராய்ந் தறிந்தால் அவ்வியல்புகள் வாய்ந்த முதல் வனை நேரே காண்டலும் எளிதில் கைகூடு மென்று தேர்தல் வேண்டும்.

இனிக், கடவுளோ அளக்கலாகாப் பேரறிவொளி வடிவாய்த் திகழ்பவர்; அவரது அவ்வறிவொளிக்கு முன்னே அறியாமை யென்னும்இருள் இருந்த இடமுந் தெரியாமல் மறைந்துவிடும்.அவர் மிகவுந் தூய்மை யுடையவர்; அவர்பால் உள்ள அத்தூய்மையானது எவ்வெவ்விடங்களிற் புலப்பட்டுத் தோன்றுமோ அவ்வவ் விடங்களிலுள்ள பொருள்களின் அழுக்குங் கறையும் எவ்வளவு மிகுந்திருப்பினும் அவை தம்மையெல்லாம் அஃது எரித்துத் தூய்மை செய்யுமே யல்லாமல், தான் அவ்வழுக்குகளாற் பற்றப்பட்டுத் தன் தூய்மையினை ஒரு சிறிதும் இழவாது. கடவுள் எப்பொருளை யுந் தாமே படைப்பவர், படைத்தவற்றைத் தாமே காப்பவர். காக்கப் பட்டவை வலிதேய்ந்து பழுதுபட்ட வழிஅவற்றைத் தாமாகவே அழிப்பவர்.அழித்தற் றொழிலைச் செய்யுங்காற் கடவுள் கொடியவர் போற் றோன்றினும், அவரே எப் பொருளுயும் படைத்துக் காத்தலால்,அருள் என்னுங் குளிர்ந்த னிய தன்மையை அவர் என்றுந் தம் அகத்தே யுடையரென்று முணர்தல் வேண்டும்.

கடவுள் எல்லா உலகங்களிலும் எல்லா உயிர்களிலும் நிறைந்து நிற்குந் தமது பொதுவிலக்கணத்திற் கட்புலனாகா அருவினராயும், அன்பினால் நெக்குநெக்கு உருகுந் தம் அடியவர்க்கு அவர்தம் ஆரா அன்பிற்கு ஆறுதல் பிறப்பித்தற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/212&oldid=1591182" இலிருந்து மீள்விக்கப்பட்டது