உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

❖ - ❖ மறைமலையம் - 27

பொருட்டு அவரை யொப்பதொரு மக்கள் வடிவிற்றோன்றி அருள்புரியும் நீரராகலிற் கட்புலனாகும் உருவினராயும், அத்துணை அன்பு வாயாத நம் போன்ற எனையுயிர்கள் உய்தற் பொருட்டுச் சிறிதும்புலப்படாத அருவுக்குந் தெளியப் புலப்பட்ட உருவுக்கும் இடைப் பட்ட பிழம்பு வடிவில் துலங்குபவராகலின் அருவுருவினராயும் இருப்பர். இனி, இவ்வுலகத்திற் காணப்படும் உயிர்ப் பொருள் ளெல்லாம் ஆண் பெண் என்னும் இரு பெரும் பகுப்பில் அடங்கக் காண்டலின், இவ்வுயிர்களின் தோற்றத்திற்கு முதலாய் நிற்குங்கடவுளும் அப்பனும் அம்மையுமாம் இருதிறமும் ஒருதிறத் தடங்கக் கொண்டு நிற்பர். இனி, உயிரில்லாத ஏனைப் பருப்பொருள் நுண்பொருள்க ளெல்லாஞ் சூடுங் குளிர்ச்சியும் ஆகிய இருவகை யாற்றல் களிலுஞ், சிவப்பும் நீலமும் ஆகிய இருவகை நிறங்களிலும் அடங்கக் காண்டலின் வை தமக்கு முதல்வரான கடவுளும் வெப்ப தட்பங்களுஞ் செம்மை நீலங்களும் உடையராவர்.

இனி, இவ்வியல்புகளையுடைய முழுமுதற் கடவுள் எதன்கண் எவ்விடத்தே நமக்கு அணுக்கராய் விளங்கி நிற்கின்றாரென்பதை நாம் அறிந்து கொள்ளல் வேண்டு மாயின், நம்மால் அறியப்படும் உலகத்துப் பொருள்களுள் எதன்கண் எவ்விடத்தே அவர்தம் இயல்புகள் அத் துணையும் புலனாகின்றனவென்பதை நாம் ஆராய்ந்தறிதல் வேண்டும். நம்முடைய அறிவினால் அறியப்படும் பொருள் ளெல்லாம் நிலன், நீர், நெருப்பு, காற்று, விசும்பு என்னும் ஐந்து பெரும் பகுப்பில் அடங்கி நிற்கின்றன. இவற்றுள் அடங்காத உயிர்ப் பாருள்களையும், அவற்றின் தன்மை களையுங் இவ்வைம்பெரும் பொருள்களின் வாயிலாகவும் இவ்வைம் பெரும் பொருட் கலப்பாற் றோன்றும் பல வேறுடம்புகளின் வாயிலாகவுமே அறியப் பெறுகின்றோம். ஆகையால், வ்வைம்பெரும் பொருள்களில் எதன் கண்ணே கடவுளுக் குரிய தன்மைகள் காணப் படுகின்றனவென்று ஆராய்ந்து

பார்ப்போமாக.

கூட

முதலில் நிலத்தின் றன்மை நீரின் றன்மைகளை ஆராய்வம். கடவுள் ஒளி வடிவினவாய்த் திகழா நிற்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/213&oldid=1591183" இலிருந்து மீள்விக்கப்பட்டது