உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

189

நிலனும் நீரும் ஒளிவடிவினவாய்த் திகழக்காணேம். கடவுள் என்றுந் தூயராயிருக்க, நிலனும் நீருந் தூய்மை கெட்டு அழுக்குற்று நிற்கவுங் காண்கின்றேம். கடவுள் அருவும் உருவும் அருவுருவும் என்னும் மூன்று தன்மையிலும் நிற்பவ ராக, நிலனும் நீரும் பற்றுதற்கு எளிய உருவாகவே நிற்கின்றன. கடவுள் ஆண்டன்மை பெண்டன்மைகள் ஒருங்குடையரா யிருக்க, நிலம் அத்தன்மைகள் இலவாயும் நீர் பெண்டன்மை யொன்றே யுளதாயும் நிற்பக் காண்டும். கடவுள் வெப்ப தட்பங்களுஞ் செம்மை நீலங்களும் உடையராயிருக்க, நிலந்தன்னியற்கையாகவே அவை தம்மை யுடையதன்றாயும் நீர் தட்பமும் நீலமுமேயுடையதாயுங் காணப்படுகின்றன. இனி, வானுங் காற்றுமென்னும் இரண்டிலாதல் இறைவனுக் குரிய இவ்வியல்புகள் அமைந்து கிடக்கின்றனவோ வென்று உற்று நோக்குவேமாயின், அவையும் ஒளியும் உருவும் வெப்ப தட்பங்களும் பிறவும் இல்லாதனவாயிருக்கின்றன. காற்றின் கட் புலனாகும் வெப்ப தட்பங்கள் தீ, நீர் என்பவற்றின் சேர்க்கை யால் உண் வனவே யன்றி, அ யன்றி,அவை தமக்கு இயற்கையிலேயே உரியன அல்ல. ஐம்பெரும் பொருள்களுள் நாற்பெரும் பொருள்களின் தன்மை இவ்வாறொழியவே, எஞ்சி நின்ற தீயின்றன்மைகளே இனி ஆராயற்பாலனவாகும்.

எல்லாம் வல்ல இறைவன் அருள் ஒளிவடிவினனாய்த் திகழ்தல்போலவே தீயும் பொருளொளி வடிவினதாய்த் திகழா நிற்கின்றது. இறைவன்றன் அருளொளிக்கு முன் ஆணவ வல்லிருள் இருந்த இடமுந் தெரியாமல் மறைதல் போலவே, தீயொளிக்கு முன்னும் உலகிருள் சுவடு தெரியாமல் மறைந்து போகின்றது. இறைவனிடத்துள்ள தூய தன்மை யானது எத்தகைய அழுக்கையுந் தூய்தாக்கித் தானும் எஞ்ஞான்றுந் தூய இயல்பிற்றாய் விளங்குதல் போலவே, தீயும் எத்துணைப் பெரிய அழுக்கின் குவியலையும் எரித்துத் தூய சாம்பராக்கித் தானும் எந்நாளும் தூயதாகவே விளங்கா நிற்கின்றது. இறைவன் படைத்தல் - காத்தல் - அழித்தல் என்னும் முத்தொழில் களைச் செய்தல் போலவே, கதிரவ னாகிய தீயின் வெம்மையும் எல்லா உயிர்ப் பொருள்களையுந் தோற்று வித்து அவற்றைச் சிலகாலம் வரையிற் காத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/214&oldid=1591184" இலிருந்து மீள்விக்கப்பட்டது