உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

  • மறைமலையம் - 27

ம்

அவற்றின் உடம்புகள் வலி தேய்ந்து பழுதுபட்டவழி அவை தம்மை அழித்து விடுகின்றது .மரஞ்செடி கொடிகளும், மற்றை இயங்கும் உயிர்களும் அவை தம்முட் சிறந்த மக்களுமாகிய எல்லா உயிரின் உடம்புகளிலும் ஓரளவான சூடு இல்லை யாயின் அவை தோன்றவே மாட்டா; இதனா லன்றோ காக்கை கோழி முதலான பறவை இனங்கள் தாம் இட்ட முட்டை களிலிருந்து குஞ்சுகளைத் தோற்றுவிக்கும் பொருட்டு அவற்றின் மேல் அடைகிடந்து அவற்றிற்குச் சூடேற்று கின்றன, அங்ஙனமே, தாயின் கருப்பையில் ஓடுஞ் சூடான செந்நீரால் உருவாக்கப்பட்டு மக்களாகிய நாமும் ந்நில வுலகத்திற் பிறந்தனம்; பிறந்த பின்னும் நமதுடம்பி லுள்ள சூடு தன்னிலையினின்று ஏறாமலும் இறங்காமலும் இருக்கும் வரையில் நாம் அதனாற் பாதுகாக்கப்பட்டு இந்நிலத்தின் மேல் ஓடியாடி யுலவித் திரிகின்றோம்; மற்று, அச்சூடு தன்னிலையில் மிகுந்து செந்நீரைச் சுவறச் செய் தாலும், அல்லது அது குறைந்து அதனை உறையச் செய் தாலும் நமது உயிர் உடம்பில் நிலைக்க மாட்டாதாய் உடனே அதனைப் பிரிந்து போய்விடுகின்றதன்றோ?

ஆகவே, தீயின் வெம்மையே எல்லா உயிரின் உடம்பு களுந் தோன்றுதற்குந் தோன்றிச் சில காலம் நிலைபெறுதற்கும் அதன்பின் அழிந்துபடுதற்கும் ஏதுவாய் நிற்கின்றதென்பது கருத்திற் பதிக்கற்பாற்று, இறைவன் அழிக்கு நிலையிற் காடியன்போற் காணப்படினும், படைத்துக் காக்கும் நிலையில் மிகுந்த அருளுடையனாதல் தெளியப்படுமாறு போலவே, தீயுந் தன் ஆற்றலை மிகுத்துக் காட்டி எல்லா வற்றையும் படுசாம்பராய் எரிக்கும் நிலையிற் கொடியது போற் றோன்றினும், எல்லா உயிருடம்புகளையுந் தோற்று வித்தற் கண்ணுந் தோற்றிய அவைகள் குளிரால் விறைக்கும் வழி அவ்விறைப்பினைத் தனது கதகதப்பால் நீக்கி அவற் றைக் காத்தற் கண்ணும் அது மிக இனிய தொன்றாகவே எல்லா உயிர்களானுங் கருதப்படா நிற்கின்றது. இறைவன் எங்கும் நிறைந்து நிற்கும்நிலையிற் கட்புலனாகா அருவி னனா யிருத்தல் போலவே, தீயும் எல்லாப் பொருள்களிலும் மறைந்து நிறைந்துநிற்கும் நிலையிற் கட்புலனாகா அருவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/215&oldid=1591185" இலிருந்து மீள்விக்கப்பட்டது