உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

191

இயல்பிற்றாய் நிற்கின்றது, இறைவன் தன்னைப் பேரன்பால் நினைந்து குழைந்துருகும் அடியார்க்கு அவர்தங் கண் ணதிரே எழில்கனிந்த பழுதறும் உருவிற்றோன்றி யருள் செய்தல் போலவே, தீயுந் தன்னை இன்றியமையாது வேண்டிநிற்கும் மக்களின் கண்ணெதிரே சிவந்த ஒளி வடிவினதாய்த் தோன்றா நிற்கின்றது. இறைவன் அருவுக்கும் உருவுக்கும்இடைப்பட்ட பிழம்பு வடிவம் உடையராதல் போலவே, தீயுங் கட்புலனாகா அருவுக்குங் கட்புலனாகும் மக்கள் உருவுக்கும் இடைப்பட்ட தாகிய பிழம்புவடிவம் உடையதா இருக்கின்றது இனி எல்லாம் வல்ல முதல்வன் அப்பனும் அம்மையுமாயும், ஆண்டன்மைக் கேற்ற வன் மையும் பெண்டன்மைக் கேற்ற மென்மையுஞ் சிவப்பு நீலங் களும் உடையனாயுமிருத்தல் போலவே, தீயுந் தன்கட் சூடுங் குளிச்சியுமாம் ஆண்டன்மை பெண்டன்மைகளுஞ் சிவப்பு நீல நிறங்கலும் உடையதாய்த் துலங்காநிற்கின்றது. தீயின்கண் நீரும் அடங்கியிருக்கும் உண்மை, கொழுந்து விட்டெரியுந் தழல் மேல் ஒரு கிண்ணத்தைக் கவிழ்த்துப் பிடித்தால் அதன் விளிம்புகளி லிருந்து நீர்த்துளிகள் சொட்டுமாற்றால் அறியப்படும்.

உண்மை

எனவே, நம்மறிவால் அறியப்படும் மண், புனல், அனல், வளி, வெளி என்னும் ஐம்பெரும் பொருள்களில் அனற் பிழம்பு ஒன்றுமட்டுமே ன்றுமட்டுமே இறைவன்கட் காணப்படும் எல்லா இயல்புகளுந் தன்கண் அமையப் பெற்றதாய் விளங்கும் இப்போது இனிது விளங்குதலால், இறைவன் எல்லாப் பொருள்களிலும் எங்கும் நிறைந்து நிற்பினுந் தன்னியல்போடு ஒருங்கொத்த தீப்பிழம்பின் கண்ணே இயற்கையாகவே முனைத்துத் தோன்றுகின்றா னென்பது உள்ளங்கை நெல்லிக் கனி போல் தெற்றெனப் புலப்படும். ஆதலால், அனற்பிழம்பு ஒன்றுமேஇறைவனது விளங்கிய

ருப்புக்கு இசைந்த தூய உடம்பாகு மென்பதுங் கடைப் பிடித்துணரற்பாற்று. இது பற்றியே, திருஞான சம்பந்தப் பெருமான்,

மங்கையர்க்கரசி வளவர்கோன்பாவை வரிவளைக்கை மடமானி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/216&oldid=1591186" இலிருந்து மீள்விக்கப்பட்டது