உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

❖ ✰ மறைமலையம் – 27

பங்கயச் செல்வி பாண்டிமாதேவி

பணி செய்து நாடோறும்பரவப் பொங்கு அழல்உருவன் பூதநாயகனால் வேதமும் பொருள்களும் அருளி அங்கயற்கண்ணி தன்னொடும்அமர்ந்த ஆலவா யாவதுமிதுவே.

என்றும், திருநாவுக்கரசு நாயனார். எரிபெ ருக்குவர் அவ்வெரி ஈசனது உருவ ருக்கம தாவது உணர்கிலார்

என்றுஞ் சுந்தரமூர்த்தி நாயனார்

காற்றுத் தீப்புன லாகி நின்றானைக் கடவுளைக் கொடுமால் விடையானை

நீற்றுத் தீயுருவாய் நிமிர்ந்தானை

என்றும், மாணிக்கவாசகப் பெருமான், சுடர்கின்ற கோலந், தீயேயென மன்னும்

என்றும் அருளிச் செய்வாராயினர்.

இனிச் சிற்றறிவுஞ் சிறு தொழிலுமுடைய நம்மனோர் மனமொழிகளால் எண்ணவுஞ் சொல்லவும் முடியாத முதல்வன், நமது சிறுமையினையுந் தனது பெருமையினையும் உணர்ந்து நம்பாற் பேரிரக்கம்உடையனாய் நாம் தன்னைக் காணவுங் கருதவும் வாழ்த்தவும் வணங்கவும் எளிதாம்படி, இங்ஙனந் தன்னியல்புகளோடு பெரும்பாலும் ஒத்த தீப்பிழம் பின்கண்ணே விளங்கித் தோன்றி நமக்கு அணுக்கனாய் நிற்கின்றனனாகலின் இத்தீப்பிழம்பே எல்லாம் வல்ல சிவனை அறிந்து வழிபடுதற்குச் சிறந்த ‘இலிங்கம்' அல்லது ‘குறி’ அல்லது ‘அடையாளம்' ஆமென்றுணர்தல் வேண்டும். இறைவனைக் காட்டும் மெய்க்குறியாய் இருத்தல் பற்றியே தீப்பிழம்பு ‘சிவ லிங்கம்' எனப்படுவதாயிற்று. இதனாலன் றோ உலக மெங்கணுமுள்ள எல்லாவகையான மக்கட் கூட்டத் தாரும் பண்டுதொட்டே இத்தீப்பிழம்பினையும், இத்தீப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/217&oldid=1591187" இலிருந்து மீள்விக்கப்பட்டது