உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

193

பிழம்பினை யொப்ப நீண்டுகுவிந்த கல்வடிவினையும் இறைவன்றன் மெய்யடையாளங்களாக ஆங்காங்கு நிறுத்தி வழிபட்டு வருகின்றாரென்க.

அற்றன்று, நீண்டு குவிந்த கல்வடிவே சிவலிங்கமென வழங்கப்படுகின்ற தன்றி அனற்பிழம்பு அவ்வாறு வழங்கப் படுதலைக் கண்டிலமாகலானும், நீண்டு குவிந்த அக்கல் வடிவு ஆண்குறியின் அடையாளமாகவும், அக் கல்லைச் சூழ்ந்த வட்டக்கல் வடிவு பெண்குறியின் அடை யாளமாகவுமே முன்னோராற் கருதப்பட்ட தென்பதற்குச்

சத்தியுஞ் சிவமுமாய தன்மையிவ் வுலகமெல்லாம்

ஒத்தொவ்வா ஆணும்பெண்ணும் உயர்குண குணியுமாக வைத்தனன் அவளால் வந்த ஆக்கம்இவ் வாழ்க்கையெல்லாம் இத்தையும் அறியார்பீட லிங்கத்தின் இயல்பும் ஓரார்.

என்னுஞ் சைவ சித்தாந்த நூலாகிய சிவஞானசித்தியாரின் திருப்பாட்டே சான்றா மாகலானும், ஆண் பெண் குறிச் சேர்க்கையினாலேயே இன்பமும் உயிர்களின் தோற்றமும் நிகழக் காண்டலானும் ஆண் பெண்குறிச் சேர்க்கையே தொன்று தொட்டுச் சிவலிங்கவடிவாக வைத்து வணங்கப் லாயிற்றென்று கோடலே பொருந்துமாம் பிறவெனின்; அறியாது கூறினாய்; இக்கூற்று ஒருவகையில் உண்மை யாமல்லது முழுதும் உண்மையாகாது; யாங்ஙன மெனிற் காட்டுதும்; ஆண் பெண் குறிகள் இன்பத்திற்கும் உயிர்களின் தோற்றத்திற்குங் கருவியாயிருப்பினும், அவை மேலே காட்டிய இறைவனியல்புகளோடு முற்றும் ஒவ்வாமையின் அவை தம்மை இறைவனடை யாளமாக வைத்து எல்லா மக்களும் பண்டு தொட்டு வழிபடலாயினா ரென்பது சிறிதும் வ்வாது. மற்றுத், தீ வடிவு ஒன்றுமே இறைவற்குரிய பண்புகளெல்லாம் ஒருங்கே பொருந்தப் பெற்றிருத்தல் காண்டுமாகலானுஞ், சிவலிங்க வடிவினைப் பண்டுதொட்டு வழிபட்டுவரும் பழஞ்சமயத்த வரெல்லாருஞ் சாம்பலாகிய திருநீற்றினைத் தமதுடம்பின்மேற் பூசி வருதலை உற்று நோக்குங்கால் அவரெல்லாந் தீவடிவில் வைத்து இறைவனை வணங்கியபின் அத்தீயினால் நீறாக்கப் பட்டுத் தூயதாய்

தீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/218&oldid=1591188" இலிருந்து மீள்விக்கப்பட்டது