உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

❖ 27✰ மறைமலையம் – 27

ளேலென எஞ்சி நிற்கும் புனிதமாஞ் சாம்பற் பொடி யினைப் பூசி வருதற் காரணம் புலப்படுதலானும், இவ்வாறன்றி அவரெல்லாம் ஆண் பெண் குறிச் சேர்க்கையையே தொழுது வருபவராயிருந்தால் அதனைத் தொழுது முடிந்த பிற் சாம்பற்பூச்சு மேற்கொள்ளுதற்கு ஒரு காரணம் வேறொரு வாற்றானும் பொருந்தப் போதாமை யானும் ஆண் பெண் குறிச் சேர்க்கையே சிவலிங்கமென கரைதல் அடாது.

அற்றேல் மேற் காட்டிய சிவஞான சித்திச் செய்யுள் அதனை அவ்வாறோதுதல் என்னையெனிற், கூறுதும். தீப்பிழம்பின் வடிவு எப்போதும் நீண்டு குவிந்து நிற்கவே காணப்படுகின்றது. தீ மிக்கதோராற்றல் வாய்ந்ததாயிருத் தலின் அதனை ஆண்பாலாகக் கூறுதல் அறிஞர்க்கெல்லாம் ஒப்பமுடிந்ததேயாகும். மற்று நீரின் வடிவோ சுழிந்த வட்ட வடிவினதாகவே காணப்படுகின்றது. ஓர் யாற்றின்கட் புனல் பெருகிச் செல்லுங்கால் அதன் இயக்கத்தை உற்று நோக்குமின்! அப்போது அது சுழிந்து சுழிந்து ஏகுதல் நன்கு உணரப்படும். இங்ஙனஞ் சுழிந்தோடும் நீர் மென்பதத்ததாய்த் தண்ணென்று குளிர்ந்திருத்தல் பற்றி அதனைப் பெண் பாலாகக் கூறுதலும் ஆ ன்றோர்க்கெல்லாம் ஒத்த கருத்தே யாகும். இவ்வாறு ஆண்பாற்றன்மையதாகிய அனல் வரிவடிவின தாயும், பண்பாற்றன்மையதாகிய நீர் வட்டச் சுழிவடிவினதாயும் அமைந்திருத்தல் போலவே, இவ்வுலகத்தில் ஆண் கூற்றிற் பட்ட உயிர்களெல்லாம் வரிவடிவான குறியுள்ள ஆணுடம்பு கள் உடையனவாயும், பெண் கூற்றிற்பட்ட ஏனையுயிர் களெல்லாம் வட்டவடிவான குறியுள்ள பெண்ணுடம்புகள் உடையனவாயும் அமைக்கப் பட்டு ன்ப வாழ்க்கை நடாத்தா நிற்கின்றன.

இனி, உயிரில்லாத பொருள்களும், உயிருடையன போல் இயங்குமாறு அமைக்கப்படுங்கால் வரிவடிவாயும் வட்ட வடிவாயுமே அமைக்கப்பட்டு அவ்விரண்டின் சேர்க்கையால் விரைந்து இயங்குதல், இஞ்ஞான்றை மேல் நாட்டு மக்களால் அமைக்கப்பட்டுலவும் நீராவி வண்டியிலும் ஏனை னை வியத்தகு பொறிகளிலும் வைத்துத் தெளிய வுணர்ந்து கொள்ளப்படும். இன்னும், இந்நிலவுலகமும், இந்நிலவுலகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/219&oldid=1591189" இலிருந்து மீள்விக்கப்பட்டது