உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

195

தினும் பெரியவும் சிறியவுமாகிய எண்ணிறந்த வுலகங்களு மெல்லாம், வான் வெளியிற் சிவலிங்கத்தை யொப்பச் சுழன்று நீண்டு செலும் மிக நுண்ணியதோர் இயக்கத்தாற் றோன்றி நடைபெறாநிற்கின்றன வென்று, இப்பேருண்மையினைப் பல வியத்தகும் ஆராய்ச்சிகளால் நிலையிட் டுரைக்கும் ஆங்கில ஆசிரியரான குரூக்கசு (Crooks) என்பார் உரைக்கும் மெய்ப் பேருரையாலும், எண்ணிறந்த இவ்வுடம்பு களும் எண்ணிறந்த வ்வுலகங்களு மெல்லாம் இவ்வரிவடிவு வட்டவடிவுகளின் சேர்க்கை யினாலேயே தோற்ற முற்று உலவுதல் ஐயுறவின்றித் தெளியப்படுமென்பது. எனவே, இறைவனும்இறைவியுமாய் ஒருங்கியைந்து இச் சிற்றுலகு பேருலகுகளைப் படைத்துங் காத்தும் அழித்தும் அருள் வழங்குங் கடவுள் நிலையே வரிவடிவிலும் வட்டவடிவிலும் புலனாதல், நெருப்புருவிலும் நீர்வடிவிலும் வைத்து நன்கறியக் கிடத்தலின், யாண்டும் பிறழா அத்தெய்வ அருள் நிலைக்கு அடங்கியே ஆண்குறி பெண்குறி யமைப்புகளும் ஈண்டு உளவாயின வென்பது தெற்றென விளங்கா நிற்கும். இவ்வரிவடிவு வட்டவடிவுகள் ஆண் பெண் உயிருடம்புகளின் மட்டுமே யன்றி, உயிரற்ற அரியபெரிய பொறி (இயந்திர) அமைப்புகளிலும் நன்கு புலனாகி நிற்றல் காண்டுமாகலின்), உயிர்ப்பொருள் உயிரில் பொருள்களாகிய எல்லாவற்றின் தோற்ற இயக்கங்களிலுஞ் சிவலிங்க வுருவே உள்ளும் புறம்புமாய் நிற்கும் உண்மை யினை விளக்குதற்கே “சத்தியுஞ் சிவமுமாய” என்னும் அவ்வரிய சிவஞான சித்திச் செய்யுள் எழுந்ததென்று காள்க இவ்வாறல்லது ஆண் பெண் குறிச் சேர்க்கையே. சிவலிங்க மாமென அதன் மெய்ம்மையை ஆய்ந்துணராது அரற்றுவா ருரை அறிவில்லாக் கயவருரை யேயாமென விடுக்க. ஆண் பெண் என்னும் இருகூற்றிற்பட்ட எல்லா அமைப்புகளின் வடிவுக்கும் முதலாய் ஊடுருவி நிற்பது சிவலிங்கவுருவாகு மன்றி அச்சிவலிங்க வுருவுக்கு முதலாய் நிற்பதும் ஆண்பெண் குறிச்சேர்க்கையேயா மென்றல் ஒருவாற்றானும்

ஏலாதென்றுணர்க.

அற்றேல், தீயுருவு ஆண்வடிவும் நீருருவு பெண் வடிவு மாதல், வடிவளவினன்றித் தன்மையளவிற் கண்டிலமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/220&oldid=1591190" இலிருந்து மீள்விக்கப்பட்டது